Monday, August 2, 2021

CM to Ministers and high level officers on preparation of Budget 2021-2022

 விவசாயிகள்‌ மற்றும்‌ துறை வல்லுநர்கள்‌, பல்வேறு சங்கப்‌ பிரநிதிகளைக்‌ கலந்தாலோசித்து மக்களுக்கும்‌ பொருளாதாரத்துக்கும்‌ பயன்தரத்‌ தக்க வகையில்‌ இவ்வாண்டு நிதி நிலை அறிக்கையும்‌ விவசாயத்‌ துறைக்கான முதல்‌ தனி நிதிநிலை அறிக்கையும்‌ அமைய வேண்டும்‌ - மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்கள்‌ மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ அறிவுறுத்தல்‌. 

திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ அளித்த தேர்தல்‌ வாக்குறுதியை நிறைவேற்றும்‌ பொருட்டு, தமிழ்நாடு அரசு இவ்வாண்டு இரண்டு நிதிநிலை அறிக்கைகளைச்‌ சட்டமன்றப்‌ பேரவையில்‌ தாக்கல்‌ செய்ய உள்ளது. தமிழ்நாடு அரசு வரலாற்றில்‌ முதன்முறையாக வழக்கமான நிதிநிலை அறிக்கையோடு வேளாண்மை மற்றும்‌ விவசாயிகள்‌ நலத்துறை சார்பாகத்‌ தனியே ஒரு நிதி நிலை அறிக்கை தாக்கல்‌ செய்யப்படவுள்ளது.


வேளாண்மை மற்றும்‌ விவசாயிகள்‌ நலத்துறை நிதிநிலை அறிக்கையினை விவசாயிகள்‌, விவசாய நிபுணர்கள்‌ மற்றும்‌ விவசாயசங்கங்கள்‌ ஆகியோரைக்‌ கலந்தாலோசித்து விவசாயம்‌ செழிக்கவும்‌ விவசாயிகள்‌ அவர்களது உழைப்பிற்கேற்ற உரிய பயன்களைப்‌ பெறும்‌ வகையில்‌ சிறந்த திட்டங்களை உள்ளடக்கி தயாரிக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்களையும்‌ அரசு உயர்‌ அலுவலர்களையும்‌ அறிவுறுத்தினார்‌.

No comments :

Post a Comment