Thursday, August 19, 2021

Financial Assistance to eminent Adi Dravidar writers

 சிறந்த எழுத்தாளர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை

      தமிழக அரசின்‌ மூலம்‌ உருவாக்கப்பட்டுள்ள ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ கலை, இலக்கிய மேம்பாட்டுப்‌ பணிக்கான (ADATA FOUNDATION) நிதியிலிருந்து 2020-2021 மற்றும்‌ 2021-2022 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும்‌ சேர்த்து சிறந்த  ஆதிதிராவிடர்‌/ஆதிதிராவிட கிருத்துவர்‌/பழங்குடியினர்‌ பிரிவைச்‌ சார்ந்த 20 எழுத்தாளர்கள்‌ மற்றும்‌ ஆதிதிராவிடர்‌ அல்லாத இருவர்‌ (ஆண்டிற்கு11 எழுத்தாளர்கள்) ஆக மொத்த‌ம்‌ 22 எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கப்படும்‌. இதற்கான நூல்‌ வெளியிட ரூ.50,000/- (ரூபாய்‌ ஐம்பதாயிரம்‌ மட்டும்‌) நிதியுதவி அளிக்கப்படும்‌. பெயர்‌, முகவரி, படைப்பின்‌ பொருள்‌ போன்ற விவரங்களுடன்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌. இதுகுறித்த விவரங்களை தமிழக அரசின்‌ tn.gov.in என்ற இணைய தளத்தில்‌ அறிந்து கொள்ளலாம்‌. மேலும்‌, அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நல அலுவலகத்திலும்‌ விண்ணப்பம்‌ பெற்றுக்கொள்ளலாம்‌.

முறையான விண்ணப்பத்துடன்‌ படைப்பினை எழுத்து வடிவில்‌ 2 (இரண்டு) பிரதிகள்‌, விண்ணப்பதாரரின்‌ கைப்பேசி எண்கள்‌ குறிப்பிட்டு அரசுக்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள்‌ 20. 09..2021.


ஆதிதிராவிடர்‌ நல ஆணையர்‌.


விண்ணப்பம்‌ அனுப்ப வேண்டிய முகவரி:-

ஆணையர்‌,

ஆதிதிராவிடர்‌ நலத்துறை ஆணையரகம்‌,

சேப்பாக்கம்‌,

சென்னை-05.

No comments :

Post a Comment