Monday, May 17, 2021

All Political Parties Members Advisory Committee

 An Advisory committee consisting of Members from all political parties formed under the Chairmanship of the Honble Chief Minister.

செய்தி வெளியீடு எண்‌: 81 

நாள்‌:16.05.2021

செய்தி வெளியீடு

      தமிழ்நாட்டில்‌ கொரோனா நோய்த்தொற்றுப்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்‌ தொடர்பாக மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ அனைத்து சட்டமன்ற கட்சித்தலைவர்கள்‌ கூட்டம்‌ 13.05.2021 அன்று தலைமைச்‌ செயலகத்தில்‌ நடைபெற்றது. அக்கூட்டத்தில்‌ நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில்‌ ஒன்றாக பின்வரும்‌ தீர்மானம்‌ (தீர்மானம்‌ எண்‌.4) நிறைவேற்றப்பட்டது.

“நோய்த்தொற்றுப்‌ பரவலை கட்டுப்படுத்தும்‌ வழிமுறைகள்‌ குறித்த ஆலோசனைகளை வழங்க, சட்டமன்ற கட்சிகளைச்‌ சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஒரு ஆலோசனை குழு அமைக்கலாம்‌ என தீர்மானிக்கப்பட்டது.”

2. மேலே தெரிவிக்கப்பட்ட தீர்மானத்தின்‌ அடிப்படையில்‌, அனைத்து சட்டமன்ற கட்சிகளின்‌ தலைவர்களுடன்‌ ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரையின்‌ அடிப்படையில்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ பின்வரும்‌ சட்டமன்ற உறுப்பினர்களைக்‌ கொண்ட ஆலோசனைக்‌ குழு அமைக்கப்படுகிறது.

ஆலோசனைக்‌ குழு உறுப்பினர்கள்‌

3. மேற்படி ஆலோசனை குழுவானது அவசர அவசியம்‌ கருதி நோய்த்‌ தொற்றுப்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்தும்‌ வழிமுறைகள்‌ குறித்து ஆலோசனைகள்‌ பெற அவ்வப்போது கூடி விவாதிக்கும்‌. இக்குழுவிற்கு பொதுத்துறை செயலாளர்‌ உறுப்பினர்‌ செயலராக செயல்படுவார்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்‌ துறை, 

சென்னை - 9.

TN CM inaugurated the special vaccination camp at Kolathur

 Honble Chief Minister inaugurated the special vaccination camp at Kolathur Assembly Constituency and inspected the COVID Special Ambulances.





Sun Group Handed Over Cheque for CMPRF

Thiru Kalanithi Maran, Chairman, Sun Group called on the Honble Chief Minister and handed over a cheque for Rs 10 Crores towards State Disaster Fund for Corona Relief Works.

செய்தி வெளியீடு எண்‌: 084 

நாள்‌:17.05.2021

                                                    செய்தி வெளியீடு

     கொரோனா நோய்த்‌ தொற்றால்‌ பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின்‌ பொருளாதாரம்‌ மீண்டெழுவதற்கும்‌, இந்தப்‌ பேரிடரை எதிர்கொள்வதற்கும்‌ தமிழ்நாடு அரசிற்கு கூடுதலான நிதி ஆதாரங்களைச்‌ செலவிட வேண்டிய தேவை உள்ளதால்‌, அரசின்‌ முனைப்பான முயற்சிகளுக்கு உதவிடும்‌ வகையில்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்களை இன்று (17.5.2021 முகாம்‌ அலுவலகத்தில்‌, சன்‌ குழுமத்தின்‌ சார்பில்‌ அதன்‌ தலைவர்‌ திரு. கலாநிதி மாறன்‌ அவர்கள்‌ சந்தித்து, கொரோனா நிவாரணப்‌ பணிகளுக்காக மாநில பேரிடர்‌ மேலாண்மை நிதியத்திற்கு 10 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்‌.

      இந்த நிகழ்வின்போது, திருமதி துர்கா ஸ்டாலின்‌ மற்றும்‌ திருமதி காவேரி கலாநிதி ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.


வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, 

சென்னை-9


Thursday, May 13, 2021

Statement of the Honble Minister on Ramzan celebration

" Statement of the Honble Minister for Minorities Welfare and Non Resident Tamils Welfare on Ramzan celebration."

செய்தி வெளியீடு எண்‌:045 

நாள்‌:19.05.2021

மாண்புமிகு சிறுபான்மையினர்‌ நலன்‌ மற்றும்‌ வெளிநாடு வாழ்‌ தமிழர்‌ நலத்துறை அமைச்சர்‌ திரு. செஞ்சி கே.எஸ்‌. மஸ்தான்‌ அவர்களின்‌ அறிக்கை

“ரமலான்‌ (14.5.202] பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில்‌ தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்‌” என்று இஸ்லாமிய சமுதாயத்தின்‌ சார்பில்‌ தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வந்திருக்கிறது. கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாகப்‌ பரவி வருவதால்‌ முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அந்த ஊரடங்கு 10.5.2021 முதல்‌ 24.5.2021 வரை நடைமுறையில்‌ இருந்து வருகிறது.

அனைவரின்‌ பாதுகாப்பையும்‌ உறுதி செய்ய பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ “முழு ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிப்பிர்‌” என்று ஏற்கனவே வேண்டுகோள்‌ விடுத்திருக்கிறார்‌. கொரோனா நோய்த்‌ தொற்றும்‌, அதை தடுக்க ஊரடங்கும்‌ நடைமுறையில்‌ இருக்கின்ற இந்தத்‌ தருணத்தில்‌, அனைத்து சமயங்களைச்‌ சார்ந்தவர்களும்‌, மதம்‌ சார்ந்த விழாக்களையும்‌ தவிர்த்து, தொற்றைக்‌ குறைக்க அரசு எடுத்து வரும்‌ முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள்‌.



சிறுபான்மையின மக்கள்‌ மீது திராவிட முன்னேற்றக்‌ கழகத்திற்கு இருக்கும்‌ மதிப்பும்‌ மரியாதையையும்‌ நன்கு அறிந்த இஸ்லாமிய பெருமக்கள்‌ அனைவரும்‌ இந்த ரமலான்‌ பண்டிகையை தங்களது இல்லங்களிலேயே தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்து, தனிமனித இடைவெளிவிட்டு ரமலான்‌ பண்டிகையை சிறப்பாகக்‌ கொண்டாடி மகிழ்ந்திட வேண்டுமாய்‌ அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, 

சென்னை-9


Tamil Nadu PR Donation towards CMPRF for Corona Relief Work

Tamil Nadu PR Donation towards CMPRF for Corona Relief Work 





 

Official Letter to the PM by Tamil Nadu CM

செய்தி வெளியீடு எண்‌: 049 

நாள்‌:13.05.2021

" Text of the D.O. letter addressed by the Honble Chief Minister to the Honble Prime Minister of India." 


    கோவிட்‌ தொற்றால்‌ அனைத்து மாநிலங்களும்‌ பாதிக்கப்பட்டுள்ள நிலையில்‌, இத்தொற்றைக்‌ கட்டுப்படுத்தத்‌ தேவையான தடுப்பூசிகளையும்‌, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத்‌ தேவையான மருந்துகளையும்‌ மாநில அரசுகள்‌ கொள்முதல்‌ செய்து வருகின்றன. இதனைக்‌ கருத்தில்கொண்டு, ஜி.எஸ்‌.டி. கவுன்சிலோடு கலந்தாலோசித்து, இந்தப்‌ பொருட்கள்‌ மீதான ஜி.எஸ்‌.டி. வரியை குறிப்பிட்ட காலத்திற்கு பூஜ்ய சதவிகிதம்‌ (Zero Rate) என நிர்ணயிக்க வேண்டும்‌ என்று மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌, மாண்புமிகு இந்தியப்‌ பிரதமர்‌ அவர்களைக்‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்கள்‌.

     பொருளாதார வளர்ச்சி கொரோனா தொற்றால்‌ பாதிக்கப்பட்டு, மாநில அரசுகளின்‌ வரி வருவாய்‌ வளர்ச்சி பெருமளவில்‌ குறைந்துள்ளதால்‌, அதனை ஈடுசெய்ய கீழ்க்குறிப்பிட்டுள்ள மூன்று நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு மாநில அரசுகளுக்கு உதவ வேண்டும்‌ என்றும்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ கோரியுள்ளார்கள்‌.



     நிலுவையிலுள்ள ஜி.எஸ்‌.டி. இழப்பீட்டுத்‌ தொகைகளையும்‌, மாநில நுகர்பொருள்‌ கழகங்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ள அரிசி மானியத்‌ தொகையையும்‌ உடனடியாக விடுவிக்க வேண்டும்‌.

     பெட்ரோல்‌ மற்றும்‌ டீசல்‌ மீதான கூடுதல்‌ மேல்வரி விதிப்பால்‌ மத்திய அரசுக்குக்‌ கிடைத்துள்ள வருவாய்‌ மாநில அரசுகளுக்குப்‌ பகிர்ந்தளிக்கப்படாத நிலையில்‌, கொரோனா தொற்றால்‌ மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பீட்டை ஈடுசெய்ய சிறப்பு நிதி உதவி (Adhoc Grants-in-Aid) அளிக்கப்பட வேண்டும்‌.

   இக்காலத்தில்‌ ஏற்பட்டுள்ள கூடுதல்‌ செலவினங்களை மேற்கொள்ளத்‌ தேவைப்படும்‌ நிதியைத்‌ திரட்டுவதற்காக, அனுமதிக்கப்பட்டுள்ள கடன்‌ வாங்கும்‌ அளவை, மாநிலத்தின்‌ உற்பத்தி மதிப்பில்‌ மூன்று சதவிகிதம்‌ என்ற அளவிலிருந்து மேலும்‌ ஒரு சதவிகிதம்‌ உயர்த்த வேண்டும்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, 

சென்னை-9

Wednesday, May 12, 2021

Compensation and Incentive for the Frontline Health Workers in COVID Situation.

Announcement of the Honble Chief Minister on compensation and incentive for the Frontline health workers involved in the treatment of COVID-19

செய்தி வெளியீடு எண்‌: 041 

நாள்‌:12.05.2021


"கொரோனா சிகிச்சைப்‌ பணியில்‌ உயிரிழந்த மருத்துவர்களின்‌ குடும்பங்களுக்கு இழப்பீடு - இரண்டாம்‌ அலையில்‌ பணியாற்றி வரும்‌ மருத்துவப்‌ பணியாளர்களுக்கு ஊக்கத்‌ தொகை"

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ அறிவிப்பு.

        கொரோனா தொற்றால்‌ பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளித்து அவர்களைக்‌ காப்பாற்றும்‌ அரும்பணியில்‌, கடந்த ஓராண்டாக மருத்துவர்களும்‌, செவிலியர்களும்‌ இதரப்‌ பணியாளர்களும்‌ அயராது அரும்பணியாற்றி வருகின்றனர்‌. இப்பணியில்‌ தமது உயிரைத்‌ துச்சமென மதித்து களப்பணியாற்றிய சில மருத்துவர்கள்‌ தமது இன்னுயிரையும்‌ தியாகம்‌ செய்துள்ளனர்‌. இது ஈடுசெய்யப்பட முடியாத பெரும்‌ தியாகம்‌ என்பதை உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்தம்‌ குடும்பத்தாருக்கு ஆறுதல்‌ அளிக்கும்வகையில்‌, கொரோனா சிகிச்சைப்‌ பணியாற்றியபோது அத்தொற்றால்‌ பாதிக்கப்பட்டு உயிரிழந்த 43 மருத்துவர்களின்‌ குடும்பங்களுக்கு தலா 25 இலட்சம்‌ ரூபாய்‌ தொகையை இழப்பீடாக வழங்கிட முடிவு செய்துள்ளது.



     மேலும்‌, அல்லும்‌ பகலும்‌ நமது அரசு மருத்துவமனைகளில்‌ பணியாற்றிவரும்‌ மருத்துவர்கள்‌, செவிலியர்கள்‌, தூய்மைப்‌ பணியாளர்கள்‌, ஆய்வுக்கூடப்‌ பணியாளர்கள்‌, சி.டி. ஸ்கேன்‌ பணியாளர்கள்‌, அவசர மருத்துவ ஊர்திப்‌ பணியாளர்கள்‌ உள்ளிட்ட அனைத்துப்‌ பணியாளர்களின்‌ சேவையைப்‌ பாராட்டும்‌ வகையில்‌, கொரோனா தொற்றுக்கான சிகிச்சை மற்றும்‌ அச்சிகிச்சை சார்ந்த பணிகளில்‌ ஈடுபட்ட மேற்கூறிய அலுவலர்களுக்கு ஊக்கத்‌ தொகை வழங்கவும்‌ இந்த அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி கொரோனா தொற்றின்‌ இரண்டாம்‌ அலைக்‌ காலமான, ஏப்ரல்‌, மே, ஜூன்‌ -மூன்று மாத காலத்திற்கு, மருத்துவர்களுக்கு 30 ஆயிரம்‌ ரூபாயும்‌, செவிலியர்களுக்கு 20 ஆயிரம்‌ ரூபாயும்‌, இதரப்‌ பணியாளர்களுக்கு 15 ஆயிரம்‌ ரூபாயும்‌, பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள்‌ மற்றும்‌ பயிற்சி மருத்துவர்களுக்கு 20 ஆயிரம்‌ ரூபாயும்‌ ஊக்கத்‌ தொகையாக வழங்கப்படும்‌.


வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, 

சென்னை-9

CM Public Relief Fund (CMPRF) Towards Relief Operations of COVID-19

Appeal from the Honble Chief Minister for contributions to Chief Ministers Public Relief Fund (CMPRF) towards relief operations of COVID-19 - Tamil Version

செய்தி வெளியீடு எண்‌: 034 

நாள்‌:11.05.2021

“முதலமைச்சரின்‌ பொது நிவாரணநிதிக்கு தாராள நிதி வழங்குவீர்‌!”

“நன்கொடை - செலவினங்கள்‌ பொதுவெளியில்‌ வெளியிடப்படும்‌”

- பொதுமக்கள்‌, சமூகநல அமைப்புகள்‌, பெருந்தொழில்‌ நிறுவனங்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ வேண்டுகோள்‌.

அன்புடையீர்‌,

      கோவிட்‌ தொற்றின்‌ இரண்டாவது அலையால்‌ நமது மாநிலம்‌ வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதை நீங்கள்‌ அனைவரும்‌ அறிவீர்கள்‌. தற்போது நமது மாநிலத்தில்‌ 1,52,389 பேர்‌ இத்தொற்றிற்காக சிகிச்சை பெற்றுவருகிறார்கள்‌. இவர்களில்‌ 31,410 பேர்‌ ஆக்சிஜன்‌ உதவியோடு சிகிச்சை பெற்று வருகிறார்கள்‌. இந்த அலை நமது மாநிலத்தின்‌ மருத்துவக்‌ கட்டமைப்பின்மீதும்‌ மக்கள்மீதும்‌ கடும்‌ தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வரலாறு காணாத இந்தச்‌ சவாலை சமாளிக்கவும்‌, மக்களின்‌ வாழ்வையும்‌ வாழ்வாதாரத்தையும்‌ பாதுகாக்கவும்‌, நமது அரசு அனைத்து முயற்சிகளையும்‌ மேற்கொண்டு வருகின்றது. மருத்துவமனைகளில்‌ உள்ள படுக்கைகளின்‌ எண்ணிக்கையை உயர்த்துதல்‌, அனைத்து உயிர்‌ காக்கும்‌ மருந்துகளையும்‌ தடையின்றி கிடைக்கச்‌ செய்தல்‌, ஆக்சிஜன்‌ விநியோகத்தை மேம்படுத்துதல்‌, கூடுதல்‌ மருத்துவ மற்றும்‌ பிற பணியாளர்களைப்‌ பணி அமர்த்துதல்‌ போன்ற பல்வேறு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

       இந்த நோய்த்‌ தொற்றால்‌ பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின்‌ பொருளாதாரம்‌ மீண்டெழுவதற்கு சிரமப்பட்டுவரும்‌ நிலையில்‌ இந்தப்‌ பேரிடரை எதிர்கொள்வதற்கு நமது அரசு கூடுதலான நிதி ஆதாரங்களைச்‌ செலவிட வேண்டிய தேவையும்‌ உள்ளது. எனவே, அரசின்‌ முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின்‌ ஒவ்வொரு பிரிவினரும்‌ தங்களால்‌ இயன்ற வகையில்‌ உதவி செய்ய வேண்டியது அவசியம்‌. 

      இச்சூழலில்‌ முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று உங்கள்‌ அனைவருக்கும்‌ தனிப்பட்ட முறையில்‌ வேண்டுகோள்‌ விடுக்கின்றேன்‌. 

      இப்பேரிடர்‌ காலத்தில்‌ தாங்கள்‌ ஒவ்வொருவரும்‌ அளிக்கக்கூடிய நன்கொடைகள்‌ அனைத்தும்‌, ஆக்சிஜன்‌ உற்பத்தி மற்றும்‌ சேமிப்பு நிலையங்கள்‌ அமைத்தல்‌, ஆக்சிஜன்‌ வசதிகளுடன்கூடிய படுக்கைகளை அமைத்தல்‌, ஆக்சிஜன்‌ செரிவூட்டும்‌ இயந்திரங்கள்‌, ஆர்‌.டி.பி.சி.ஆர்‌. கிட்டுகள்‌, உயிர்காக்கும்‌ மருந்துகள்‌, தடுப்பூசிகள்‌ மற்றும்‌ பிற மருத்துவக்‌ கருவிகளை வாங்குதல்‌ போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப்‌ பயன்படுத்தப்படும்‌ என நான்‌ உறுதி அளிக்கிறேன்‌. மேற்கூறிய நடவடிக்கைகளுக்காக பெறப்பட்ட நன்கொடை விவரங்கள்‌ மற்றும்‌ இந்த நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள்‌ குறித்த விவரங்கள்‌ அனைத்தும்‌ வெளிப்படையாக பொதுவெளியில்‌ வெளியிடப்படும்‌ என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்கின்றேன்‌.

       இவ்வாறு அளிக்கப்படும்‌ நன்கொடைகளுக்கு வருமான வரிச்‌ சட்டம்‌ பிரிவு 80(6)-ன்கீழ்‌ 100 விழுக்காடு வரிவிலக்கு உண்டு. வெளிநாடு வாழ்‌ இந்தியர்கள்‌ (41515) அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும்‌ நிவாரணத்திற்கு அயல்‌ நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்று) சட்டம்‌ 2010, பிரிவு 50-ன்கீழ்‌ விலக்களிக்கப்படும்‌

(இந்திய உள்துறை அமைச்ச ஆணை எண்‌.F.No.II/21022/94(1124)/2015-FCRA-III, நாள்‌ 22.12.2015.)

நன்கொடைகளை மின்னணு முறை மூலம்‌ பின்வருமாறு வழங்கலாம்‌.

i. வங்கி இணைய சேவை அல்லது கடன்‌ அட்டை / பற்று அட்டையின்‌ மூலமாக கீழ்க்கண்ட இணையதளம்‌ வழியாகச்‌ செலுத்தி இரசீதினைப்‌ பெற்றுக்கொள்ளலாம்‌.

https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html

Electronic Cleaning System (ECS) /RTGS /NEFT  மூலமாக கீழ்க்காணும்‌ இந்தியன்‌ ஒவர்சீஸ்‌ வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம்‌.


vi. மின்னணு மூலம்‌ பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள்‌ குறுக்குக்‌ கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்‌:-

அரசு இணைச்‌ செயலாளர்‌ மற்றும்‌ பொருளாளர்‌,

முதலமைச்சர்‌ பொது நிவாரண நிதி,

நிதித்துறை, தமிழ்நாடு அரசு,

தலைமைச்‌ செயலகம்‌,

சென்னை - 600 009, தமிழ்நாடு, இந்தியா.

மின்னஞ்சல்‌ முகவரி jscmprf@tn.gov.in

     தற்போதைய நோய்‌ தொற்று நிலையில்‌, நேரிடையாக மாண்புமிகு முதலமைச்சரிடமோ, அரசு அலுவலர்களிடமோ நன்கொடை வழங்குவதை தவிர்க்க வேண்டும்‌. எனினும்‌, 10 லட்சம்‌ ரூபாய்க்கு மேல்‌ நிதியுதவி செய்யும்‌ நபர்கள்‌/ நிறுவனங்களின்‌ பெயர்கள்‌ பத்திரிகை செய்தியாக வெளியிடப்படும்‌. பெறப்படும்‌ அனைத்து நன்கொடைகளுக்கும்‌ உரிய இரசீதுகள்‌ அனுப்பி வைக்கப்படும்‌.

      மேற்கூறிய முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும்‌ நன்கொடைகள்‌ தவிர, நிறுவனங்களின்‌ சமூகப்‌ பொறுப்பு (Corporate Social Responsibility (CSR))-ன்கீழ்‌ கொரோனா நிவாரணத்திற்காக நிதியுதவி வழங்கும்‌ நிறுவனங்கள்‌, மாநிலப்‌ பேரிடர்‌ மேலாண்மை அமைப்பின்‌ கீழ்காணும்‌ வங்கிக்‌ கணக்கில்‌ செலுத்தலாம்‌.

வங்கி பெயர்‌                                 - இந்தியன்‌ ஓவர்சீஸ்‌ வங்கி

கிளை                                           - தலைமைச்‌ செயலகம்‌,

சென்னை                                     - 600 009

சேமிப்புக்‌ கணக்கு எண்‌               - 117201000017908

IFSC code                                      -  IOBA0001172


இந்த நன்கொடைகளும்‌ மாநில அரசால்‌ மேற்கொள்ளப்படும்‌ கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப்‌ பயன்படுத்தப்படும்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, 

சென்னை-9


>>For More Details Click here 

 

Tuesday, May 11, 2021

24/7 HelpLine Numbers for Continuous Process Industries

 24/7 HelpLine Numbers for Continuous Process Industries and other Industries manufacturing Essential Commodities.

செய்தி வெளியீடு எண்‌: 033 

நாள்‌:11.05.2021


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ ஆணைக்கிணங்க, அத்தியாவசிய தொழிற்சாலைகள்‌ மற்றும்‌ நிறுவனங்களுக்கு உதவிட 24/7 தொலைபேசி வழி உதவி சேவை மையம்‌ அமைத்தல்‌.

       கோவிட்‌ பெருந்தொற்று முழு ஊரடங்கு தொடர்பாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌, 9.5.2021 அன்று தலைமைச்‌ செயலகத்தில்‌ தொழில்‌ சங்கத்தினர்களுடன்‌ கலந்தாலோசனை மேற்கொண்டார்கள்‌. அக்கூட்டத்தில்‌ கலந்துகொண்ட தொழில்‌ சங்கங்களின்‌ பிரதிநிதிகள்‌ விடுத்த கோரிக்கையின்‌ அடிப்படையில்‌, இந்த முழு ஊரடங்கு காலகட்டத்தில்‌ தொடர்‌ செயல்முறை தொழிற்சாலைகள்‌ (Continuous process Industries), அத்தியாவசிய பொருட்கள்‌ தயாரிக்கும்‌ தொழிற்சாலைகள்‌ (Essential Commodities) மற்றும்‌ கட்டுமானப்‌ பணிகள்‌ ஆகியவை தொடர்ந்து செயல்படுவதில்‌ ஏற்படும்‌ இடர்பாடுகளை களையும்‌ பொருட்டு 24/7 தொலைபேசி வழி உதவி சேவை மையம்‌ தொடங்க மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ உத்திரவிட்டதன்‌ அடிப்படையில்‌, தமிழ்நாடு அரசின்‌ தொழில்‌ துறை ஓர்‌ உதவி சேவை மையத்தினை தொடங்கியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள்‌ மற்றும்‌ நிறுவனங்கள்‌ தங்களுக்கு ஏற்படும்‌ பிரச்சினைகள்‌/சந்தேகங்கள்‌ மற்றும்‌ தேவையான உதவிகளுக்கு கீழ்க்கண்ட அலுவலர்களின்‌ அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்‌.

     மேலும்‌ இது தொடர்பாக covidsupport@investtn.in என்ற மின்னஞ்சல்‌ முகவரியையும்‌ அணுகலாம்‌.


வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, 

சென்னை-9

G.O of Food and Consumer Protection Department about COVID 19 Relief Fund

சுருக்கம்‌

     பொது விநியோகத்‌ திட்டம்‌ - கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்று - நிவாரண உதவிகள்‌ - மே 2021 மாதத்தில்‌ அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும்‌ ரூ.2000/- நிவாரணத்‌ தொகை வழங்குதல்‌ -ஆணைகள்‌ வெளியிடப்படுகின்றன.


கூட்டுறவு, உணவு மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்‌ ( எப்‌) துறை


அரசாணை (நிலை) எண்‌.37 

நாள்‌ : 07.05.2021

பிலவ வருடம்‌, சித்திரை-24

திருவள்ளுவர்‌ ஆண்டு 2052


படிக்க:

அரசாணை (நிலை எண்‌.364, வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மை

துறை, நாள்‌ 03.05.2021.

ஆணை:

       தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவை தேர்தல்‌-2021 தொடர்பாக வெளியிட்டுள்ள தேர்தல்‌ அறிக்கையில்‌, கொரோனா அச்சுறுத்தல்‌ மீண்டும்‌ திரும்பி உள்ள நிலையில்‌, கட்டுப்பாடுகளும்‌ மக்களின்‌ துயரங்களும்‌ தொடர்வதால்‌ தமிழக மக்களின்‌ துன்பங்களைப்‌ போக்குவதற்கு, அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள்‌ அனைத்திற்கும்‌ ஆறுதல்‌ அளிக்கும்‌ வகையில்‌ முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ பிறந்த திருநாள்‌ முதல்‌ ரூ.4000/- வழங்கப்படும்‌ என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ உறுதியளித்துள்ளார்கள்‌.

      தமிழ்நாட்டில்‌ நாளுக்கு நாள்‌ அதிகரித்து வரும்‌ கொரோனா நோய்ப்‌ பரவலைக்‌ கருத்தில்‌ கொண்டும்‌, நோய்ப்‌ பரவலைத்‌ தடுக்க மத்திய அரசின்‌ உள்துறை அமைச்சகம்‌ மற்றும்‌ சுகாதாரம்‌ மற்றும்‌ குடும்பநலத்துறை அமைச்சகம்‌ பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில்‌ கொண்டும்‌, தமிழ்நாட்டில்‌ நோய்த்‌ தடுப்பு நடவடிக்கைகளை மேலும்‌ தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின்‌ அடிப்படையில்‌ 06.05.2021 காலை 4.00 மணி முதல்‌ 20.05.2021 காலை 4.00 மணி வரையிலான காலத்திற்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மேலே படிக்கப்பட்ட அரசாணையில்‌ ஆணைகள்‌ வெளியிடப்பட்டுள்ளன.

Honble Minister For Fisheries and Animal Husbandry Chaired Review Meeting

Honble Minister for Fisheries – Fishermen Welfare and Animal Husbandry chaired a review meeting of the department.

செய்தி வெளியீடு எண்‌: 029 

நாள்‌:10.05.2021

பத்திரிக்கை செய்தி

கால்நடை பராமரிப்புத்துறை

      தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு மற்றும்‌ மருத்துவப்‌ பணிகள்‌ இயக்குநர்‌ அலுவலக மாநாட்டுக்‌ கூட்ட அரங்கத்தில்‌ 10.05.2021 அன்று மாண்புமிகு மீன்வளம்‌ - மீனவர்‌ நலத்துறை மற்றும்‌ கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்‌ திரு.அனிதா.ஆர்‌.ராதாகிருஷ்ணன்‌ அவர்கள்‌ தலைமையில்‌ துறையின்‌ செயல்பாடுகள்‌ குறித்து ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. இவ்வாய்வுக்‌ கூட்டத்தில்‌ கால்நடை பராமரிப்பு, பால்வளம்‌ மற்றும்‌ மீன்வளத்துறை முதன்மைச்‌ செயலாளர்‌ டாக்டர்‌ கே.கோபால்‌, இ.ஆ.ப., கால்நடை பராமரிப்பு மற்றும்‌ மருத்துவப்‌ பணிகள்‌ இயக்குநர்‌, திரு அ.ஞானசேகரன்‌, இ.ஆ.ப., தலைமை அலுவலக கூடுதல்‌ இயக்குநர்கள்‌, இணை இயக்குநர்கள்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

        மாண்புமிகு மீன்வளம்‌ - மீனவர்‌ நலத்துறை மற்றும்‌ கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ கால்நடை பராமரிப்புத்துறையால்‌ செயல்படுத்தப்படும்‌ பல்வேறு பணிகள்‌ மற்றும்‌ திட்டங்கள்‌ குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்‌. மாண்புமிகு மீன்வளம்‌ - மீனவர்‌ நலத்துறை மற்றும்‌ கால்நடை பராமரிப்புத்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌ கிராமபுற பொருளாதார முன்னேற்றத்திற்கு கால்நடைகளின்‌ பங்கு மிக முக்கிய இடம்‌ அளிப்பதால்‌, தற்போது உள்ள கொரோனா பெருந்தொற்று சூழலிலும்‌ கால்நடை வளர்போர்‌ பாதிக்கா வண்ணம்‌ கால்நடை பராமரிப்புத்துறையின்‌ செயல்பாடுகள்‌ அமைய வேண்டும்‌ என அறிவுறுத்தினார்‌.

       மாண்புமிகு தமிழக முதல்வர்‌ அவர்களின்‌ ஆணைக்கு இணங்க விவசாய பெருமக்கள்‌ பயன்பெரும்‌ வகையில்‌ புதிய தொழில்நுட்ப யுக்திகள்‌ மூலம்‌ தேவையான மாற்றங்கள்‌ கால்நடை துறையில்‌ மேற்கொண்டு விவசாயிகளின்‌ வாழ்வாதாரத்தை பெருக்கிடும்‌ வகையில்‌ துறை அலுவலர்கள்‌ பணி புரியும்‌ படி அறிவுறித்தினார்‌.

       மாண்புமிகு தமிழக முதல்வர்‌ அவர்கள்‌ வேலை வாய்ப்பினை அதிகரிக்க அறிவுறுத்தியதன்‌ அடிப்படையில்‌ கால்நடை பராமரிப்புத்துறையில்‌ அனைத்து நிலைகளிலும்‌ காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட உள்ள தடைகளை உடனடியாக நீக்கி, வேலைவாய்ப்புகளை உருவாக்க வழி வகை செய்திட அறிவுறித்தினார்‌.

       மேலும்‌ புதிய தொழில்நுட்ப அணுகுமுறையின்‌ மூலம்‌ கால்நடை வளர்போருக்கு அவர்களின்‌ வாழ்வாதாரத்தை முன்னேற்றி அவர்களின்‌ விருப்பத்திற்கேற்ப பெண்‌ கன்றுகளை உருவாக்கிட வழி வகை செய்ய வேண்டும்‌ எனவும்‌ மேலும்‌ விவசாயிகளின்‌ வருமானத்தை பெருக்கி அவர்களின்‌ வாழ்வாதாரத்தை உயர்த்திட துறையிலுள்ள பணியாளர்கள்‌ திறம்பட பணிபுரிய அறிவுறித்தினார்‌.


வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, 

சென்னை-9

Honble Governor appointed Thiru. K. Pitchandi as Speaker

 Honble Governor appointed Thiru. K. Pitchandi as Speaker Pro-tem for the 16th Tamil Nadu Legislative Assembly.

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY

PRESS RELEASE


Thiru. K. Pitchandi, Speaker Pro-tem appointed by the Honble Governor solemnly affirmed in Tamil Nadu today (10.5.2021) at 11.00 A.M. before the Honble Governor at Raj Bhavan, Guindy, Chennai-600022 as a Member of the Sixteenth Tamil Nadu Legislative Assembly.

Honble Chief Minister, Honble Ministers and the Chief Secretary to Government were present.


Secretariat, K SRINIVASAN,

Chennai-600009. Secretary.

Dated: 10.5.2021


தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவை

     மாண்புமிகு ஆளுநர்‌ அவர்களால்‌ தற்காலிகப்‌ பேரவைத் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ள திரு. கு. பிச்சாண்டி அவர்கள்‌, இன்று (10.05.2021) காலை 11.00 மணிக்கு சென்னை -600022, கிண்டியிலுள்ள ஆளுநர்‌ மாளிகையில்‌, மாண்புமிகு ஆளுநர்‌ முன்னிலையில்‌, பதினாறாவது சட்டமன்றப்‌ பேரவை உறுப்பினராக உளமார உறுதிமொழியை தமிழில்‌ எடுத்துக்கொண்டார்கள்‌.

   அவ்வமயம்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌, மாண்புமிகு அமைச்சர்கள்‌ மற்றும்‌ தலைமைச்‌ செயலாளர்‌ ஆகியோர்‌ வருகைப்‌ புரிந்தனர்‌.


தலைமைச்‌ செயலகம்‌, கி. சீனிவாசன்‌,

சென்னை-600 009, செயலாளர்‌.

நாள்‌: 10.5.2021

Wednesday, March 24, 2021

TNMA conducts Modular Courses for Seafarers - 2021

    Tamilnadu Maritime Academy (TNMA) conducts the following Standards of Training, Certification and Watch Keeping (STCW) – 2021 Modular Courses for Seafarers. These Courses are conducted once in every month and if required more batches are conducted depends on demand by Seafarers.

Refresher Proficiency in Survival Techniques (PST) and Refresher Fire Prevention and Fire Fighting (FPFF).






Coaching for Civil Services (I.A.S., I.P.S., etc.,) Prelimininary Examination - 2021

Coaching for Civil Services (I.A.S., I.P.S., etc.,) 
Prelimininary  Examination - 2021




 

Monday, March 22, 2021

Friday, March 19, 2021

The Chief Electoral Officer Chaired Meeting For TN Legislative Assembly, 2021

  The Chief Electoral Officer chaired a meeting on intensive monitoring of cash and liquor seizure during General Elections to Tamil Nadu Legislative Assembly, 2021



Provision of Infrastructure Facilities to 233 Adi Dravidar Welfare Schools

     ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் - கல்வி – விடுதிகள் – மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விதி 110 – இன் கீழான அறிவிப்பு 10 ஆண்டுகளுக்குமேலாக உள்ள 20 பழங்குடியினர் நல விடுதிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல் - ரூ. 3,82,86,328-க்கு நிர்வாக அனுமதி – ஆணை வெளியிடப்படுகிறது.

   Adi Dravidar and Tribal Welfare Department (ADTW) - Education - Schools - Provision of Infrastructure facilities to 233 ADW Schools at a cost of Rs.106.2879 crores with loan assistance from NABARD RIDF XXV SCHEME - ORDERS ISSUED.

Click Here for the G.O Tamil Version.

Click Here for the G.O English Version.

Submission of application for the concurrence of unauthorized Educational Institutions

 Date:18.03.2021

PRESS RELEASE

         Guidelines have been issued vide G.O.Ms.No.76, Housing and Urban Development department dated: 14.6.2018 for grant of concurrence for educational institutional buildings constructed and functioning before 1.1.2011 in non-plan areas. The stay order issued by the Madras High Court, Chennai which prevented grant of concurrence for the applications received online during the period of 3 months from 14.6.2018 to 13.09.2018, has been vacated by the court in its order dated: 10.02.2021 in Writ Appeals no.233/2019 etc. 

        As per this order of the court those who have already applied under the scheme may approach the concerned District Town and Country Planning office to obtain concurrence by submitting relevant details. In the said order, the court has also given two weeks time to register applications under the scheme as another opportunity to those who have missed submission of applications earlier opportunity. 

        The Election Commission of India has offered no objection from the Model Code of Conduct angle to receive fresh applications online under the scheme and to issue a press release regarding this matter. Further, it is also informed that those who are interested to obtain concurrence under this scheme may register application in two weeks’ time from 22.3.2021 to 4.4.2021 in the website: www.tn.gov.in/tcp. It is requested to utilize this one time rare opportunity.

Released by:

Director,

Town and Country Planning department,

E&C Market Road,

CMDA Complex, 3rd Floor,

Koyambedu, Chennai – 600 107.

Director of Town and Country Planning

Issued By: - DIPR, Secretariat, Chennai - 9.

Re-issue of 6.73% Tamil Nadu State Development Loan 2030

 Date:18.03.2021


FINANCE (WAYS AND MEANS-II) DEPARTMENT

PRESS RELEASE, DATED THE MARCH 18, 2021 


      Government of Tamil Nadu has announced the Re-issue of 6.73% Tamil Nadu State Development Loan 2030 in the form of Stock to the Public by auction for an aggregate amount of Rs.977.00 crore. The auction will be conducted by the Reserve Bank of India at its Mumbai Office, Fort, Mumbai, on March 23, 2021. Competitive bids between 10.30 A.M. and 11.30 A.M. and non-competitive bids between 10.30 A.M. and 11.00 A.M. shall be submitted electronically on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System on March 23, 2021.


 S.Krishnan,

 Additional Chief Secretary to Government,

 Finance Department.

Issued By: - DIPR, Secretariat, Chennai - 9.

Thursday, March 18, 2021

TN and Bihar Health Department Officials Meeting

  The Bihar State Health Department Officials called on the Chief Electoral Officer of Tamil Nadu and explained the precautionary measures being taken to prevent COVID-19 during the Bihar State Election.



Tuesday, March 9, 2021

Legal Services Information Booklet

   TamilNadu State Legal Services Authority puplished legel services information booklet “Access To Justice For All”.

The Constitution of India provides for free legal aid to the poor and weaker sections of the society and ensures justice for all. The Constitution also make it obligatory for the State to ensure equality before law and a legal system which promotes justice on the basis of equal opportunity to all.


Click Here for the BOOKLET


Amudham Departmental Stores (ADS)

     Corporation runs 22 Amudham Departmental Stores in Chennai Region and 5 Departmental Stores in Cuddalore Region. Objective of these departmental stores is to market essential commodities such as Pulses and Cereals, Fast Moving Consumer Goods at less than MRP and thus to check price rise in the open market effectively.

Amudham Departmental Stores in Chennai Region & Cuddalore Region

Chennai Region

Anna Nagar west A/c

PloT 2133A, TNHB Shopping Complex,Anna Nagar West,

Near SBOA School, Chennai - 600 101

Nandanam

TNCSC Godown Complex, 30A Chamiers Road,Nandanam,

Chennai 600 035

Ashok Nagar

TNHB Shopping complex, Near Ashok Pillar, AshokNagar,

Chennai 600 083

R.K.Mutt road

Venkatesa Agraharam, R.K.Mutt Road, Mylapore,Chennai 600 004

Inidra Nagar

No.48 Dr.Muthulakshmi Salai,Adyar,Chennai 600 020

C.P.R.Road

Chennai Corpopration Shoping Complex, C.P.R.Road,Alwarpet,

Chennai 600 018

Periyar Nagar

Periyar Nagar Main Road, Opp.to Govt. MedicalHospital,

Chennai 600 082

M.M.D.A. Colony

No.249/2 M.M.D.A.Colony Main Road,Arumbakkam, Chennai 600 106

Gopalapuram A/c

TNCSC Office Complex, NO.7 Conran Smith Road,

Gopalapuram, Chennai 600 086

Anna Nagar Main

TNCSC Godown Complex,Near Anna Nagar Tower,Chennai-40

Tambusamy Road A/c

No.42 Thambusamy Road, Head Office Complex,

Kilpauk, Chennai 600 010

Chinmayar Nagar

No.5 Sayee Nagar,Chinmaya Nagar, Chennai 600 092

Porur

No.81 Trunk Road, Porur, Chennai 600 116

Anna Nedumpathai

No.42 Anna Nedumpathai, Choolaimedu, Chennai 600 094

Tambaram

No.14,15,16 Municipality Shopping Complex,Shanmugam Salai,

Tambaram, Chennai 600 045

K.K.Nagar West

Ramasamy street,Near Amman Koil,K.K.Nagar,Chennai-78

Munusamy Salai

No.9 & 10 TNHB Shopping complex, K.K.Nagar,Chennai-78

V.M.Street

No.430 V.M.Street, Royapettah, Chennai 600 014

Shanthi Colony SSC

No.2459-A Shanthi Colony, Anna Nagar, Chennai 600 040

Thiruvanmiyur

No.14 TNHB Shopping complex,Thiruvanmiyur,Chennai 41

Arcot Road

No.2459-A Shanthi Colony, Anna Nagar, Chennai 600 040

Avadi

No.232 New Miltary Road, Avadi

Under this scheme, subsidy claim are preferred with the respective Department every month and reimbursed.

Cuddalore Region

Neyveli Block-17

Mahatma Gandhi Road, Neyveli Block-17,Neyveli -1

Neyveli Block-19

No.56-57 Daily Bazar, Block-19,Neyveli - 1.

Neyveli Block-29

Neyveli Block 29, Shoping Complex,Neyveli - 7.

Ads Ro Complex

Regional Office Complex, Cuddalore.

Thirupathiripuliyur

No.6, Theraditheru, Gmc Complex, Thirupathiripuliyur,Cuddalore - 2.

TN announces COVID 19 Vaccination Centres

Tamil Nadu Health Department announces COVID 19 Vaccination Centres List all over Tamil Nadu.


Click here to get Government Vaccination Centres.

Click here to get Private Vaccination Centres.


Counseling for admission to BNYS Medical Degree Course

 DIRECTORATE OF INDIAN MEDICINE AND HOMOEOPATHY, CHENNAI- 106.

YOGA & NATUROPATHY SYSTEM OF MEDICINE


After the conduct of two phases of counseling for admission to BNYS Medical Degree Course in one Govt. and Seventeen Self-Financing Yoga & Naturopathy Medical Colleges 597 seats are lying vacant in Self-Financing Yoga and Naturopathy Medical Colleges for the academic year 2020-21. A walk-in Counseling is going to be held on 11.03.2021 at 02.00 PM at Selection Committee office, Directorate of Indian Medicine and Homoeopathy, Chennai-106 for filling up of the below mentioned vacancies

All the candidates who abstained during the earlier phases of counseling, belated applicants, missed out candidates etc., can avail this opportunity and shall apply freshly by downloading the Application Form from our official website: “www.tnhealth.tn.gov.in” and shall submit the filled in application along with application cost of Rs.500/- (Rupees Five Hundred only) in cash between 08.00 a.m. to 12.00 Noon on 11.03.2021 at Selection Committee office, Directorate of Indian Medicine and Homoeopathy, Chennai-106 IN PERSON ONLY. Applications will NOT be accepted after 12.00 Noon on that day.


    General Merit list will be arrived at and declared at around 01.30 pm after thorough scrutiny of the original testimonials on the same day and counseling will be held at 02.00 PM on the same day and allotments will be made based on general merit list applying rule of reservation and all relevant rules and regulations that find place in the Prospectus for BNYS course 2020- 2021 academic session will also apply. Eligible applicants can participate in the above counseling with all original certificates / Bonafide Certificate with copies of the required certificates mentioned in the Prospectus issued by the Institution in which they study at present along with Counseling Processing fee of Rs.500/- and Advance part tuition fee of Rs.10000/- in cash mode. On getting allotment one should be able to join on or before 15.03.2021 upto 5.00 pm at the respective allotted Medical college.


Director

of Indian Medicine and Homoeopathy

Monday, March 8, 2021

Re-issue of 6.66% Tamil Nadu State Development Loan 2030

 Date: 04.03.2021


FINANCE (WAYS AND MEANS-II) DEPARTMENT 

PRESS RELEASE, DATED THE MARCH 04, 2021


               Government of Tamil Nadu has announced the Re-issue of 6.66% Tamil Nadu State Development Loan 2030 in the form of Stock to the Public by auction for an aggregate amount of Rs.2500.00 crore. The auction will be conducted by the Reserve Bank of India at its Mumbai Office, Fort, Mumbai, on March 09, 2021. Competitive bids between 10.30 A.M. and 11.30 A.M. and non-competitive bids between 10.30 A.M. and 11.00 A.M. shall be submitted electronically on the Reserve Bank of India Core Banking Solution (E-Kuber) System on March 09, 2021.


 S.Krishnan,

 Additional Chief Secretary to Government,

 Finance Department.

Issued By: - DIPR, Secretariat, Chennai - 9.

Tuesday, December 22, 2020

Notification for Therapeutic Assistant (Male) & Therapeutic Assistant (Female) Requirement

 Applications are invited only through online mode up to 24.12.2020 for direct recruitment on temporary basis to the posts of Therapeutic Assistant (Male) and Therapeutic Assistant (Female) in Tamil Nadu Medical Subordinate Service carrying the level of pay noted against.





Call Centre and Help Desk – Government of Tamil Nadu

S.No. Name of the Facility Contact No. Remarks
1. Amma Call Centre (www.ammacallcentre.tn.gov.in) 1100(Toll Free)24 x 7 All Department related complaints
2.
The Tamil Nadu Generation and Distribution Corporation Limited (TANGEDCO) 


1912 (Toll Free) 24 x 7 Electricity Failure related complaints
3. Chennai MetroWater Complaints 044-45674567 24 x 7 Metro Water Related Complaints at Chennai
4. Chennai Corporation

(https://www.chennaicorporation.gov.in/complaints/index.htm)

1913 (Toll Free) 24 x 7 Chennai Corporation Related Complaints
5. Crime Reporting 100 Police Complaints
6.
Ambulance Services

http://tnhsp.org/tnems/

108 Health Services
7. Disaster Management Help Line (State Helpline)



1070 TNSDMA
8. Disaster Management Help Line (District Helpline)



1077 TNSDMA

Friday, December 18, 2020

TN Safe & Ethical Artificial Intelligence Policy 2020

Government Of Tamil Nadu, Information Technology Department  announced Safe & Ethical Artificial Intelligence Policy 2020

Following are the primary objectives of this Policy –

1.  To  provide  a  framework  for  inclusive,  safe  &  ethical  use  of Artifi cial  Intelligence  in  Government domain and to build fairness, equity, transparency and trust in AI assisted  decision making systems.

2.  To  establish  guidelines for the  evaluation  of  an AI Systems  before  it’s  rolled  out for  Public use. 

3.  To build a mature and self-sustaining Artifi cial Intelligence community to aid the growth  of Artifi cial Intelligence  in Tamil Nadu  and to train  and  skill  people  in Tamil Nadu  in  Artifi cial Intelligence.

4.  To provide access to Open Data, Data Models, and Computing Resources.

5.  To build a regulatory sandbox that can be used for researching, building and deploying  Artifi cial Intelligence based applications by Start-ups, Private and Public Enterprises,  and Academia.

6.  To promote investments in AI R&D in Tamil Nadu.



In a path breaking ICT Initiative, the Hon’ble Chief Minister of Tamil Nadu had recently announced  setting  up  of  a  “Center  of  Excellence  in  Emerging  Technologies  (CEET)”  under the aegis of Tamil Nadu e-Governance Agency (TNeGA). The Center has been set  up and has started functioning with few  resources in place. CEET is mandated to work  with government departments and help them solve their key governance problems with  help of emerging technologies such as Artifi cial Intelligence (AI), Internet of Things (IoT),  Blockchain, Drones, Augmented Reality (AR) / Virtual Reality (VR) and others. CEET has  started  conceptualizing  and  developing  solutions  for  problems  from  health,  education, rural  development  department,  agriculture  and  land  registration  departments.  A few solutions using Image Recognition have been developed and are ready to roll out at  scale. In addition, CEET also extensively engages with Startups and provides them with opportunities,  resources  and  mentoring  to  help  them  solve  problems  with  high  social impact and big scale.

>>Click Here for TN Safe & Ethical Artificial Intelligence Policy 2020

Honble Chief Minister inaugurated Amma Mini Clinic

Honble Chief Minister inaugurated Chief Ministers Amma Mini Clinic at Muthunaickenpatti, Omalur Panchayat Union, Salem District and inspected the treatment given to the public 




Wednesday, November 11, 2015

TN Minister distributed food packets to the people of flood effected areas

Honble Minister for Commercial Taxes and Registration distributed food packets to the people of flood effected areas




CM chaired a meeting on the preventive measures and the action taken for the North East Monsoon

 Honble Chief Minister chaired a meeting with Honble Ministers and Secretaries on the preventive measures and the action taken for the North East Monsoon

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்கியவுடனேயே கன மழையை எதிர்கொள்ளும் வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அரசு உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் நான் உத்தரவிட்டிருந்தேன். உயிரிழப்புகள் மற்றும் பல்வேறு சேதங்களுக்கான நிவாரண உதவித் தொகைகளை உயர்த்தி நான் ஆணையிட்டேன். பருவமழை பாதிப்பை விரைந்து எதிர்கொண்டு நிவாரணப் பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ளவும் நான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தேன். இது தொடர்பாக ஒரு அறிக்கையினையும் நான் 4.11.2015 அன்று வெளியிட்டிருந்தேன்.

எனது உத்தரவின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, பொதுப் பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, போக்குவரத்துத் துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் மின்வாரியம் ஆகியவை உள்ளிட்ட அரசுத் துறைகள் மிகுந்த விழிப்புடன் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் முடிய 440 மி.மீ. மழை பெறப்படும். வங்கக் கடலில் உருவான தீவிர காற்றழுத்த மண்டலத்தின் காரணமாக கடந்த மூன்று நாட்களில் 300 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. கடலூர் மாவட்ட சராசரி மழை அளவு 697 மி.மீ. ஆகும். தற்போது வரை 500 மி.மீ. மழை பெய்துள்ளது. எனவே, கடலூர் மாவட்டத்தில் பெருமழை காரணமாக சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

8.11.2015 மற்றும் 9.11.2015 ஆகிய நாட்களில் மட்டும் கடலூர் மாவட்டத்தில் 266 மி.மீ. மழை பெய்துள்ளதால், கடலூர் மாவட்டம் மழையால் அதிக அளவு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கடலூர் மாவட்டத்தில் மிக அதிக அளவில் மழை பெய்துள்ளதால், 9.11.2015 அன்று மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி திரு. ககன்தீப் சிங் பேடி அவர்களை அனுப்பி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை ஒருங்கிணைக்க நான் உத்தரவிட்டதின்பேரில், 9.11.2015 அன்று முதல் திரு ககன்தீப் சிங் பேடி அவர்கள் தலைமையில் உயர் அதிகாரிகள் கடலூரில் முகாமிட்டு வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கென அனுப்பப்பட்ட திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் குழு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு தொடர்பான பணிகளை துரிதமாக  மேற்கொண்டுள்ளது. ஊரக வளர்ச்சி இயக்குநர் திரு பாஸ்கரன் இஆப., நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு பிரகாஷ் இஆப., தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு விஜயராஜ்குமார், இஆப., தமிழ்நாடு மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு சாய்குமார் இஆப., பேரூராட்சிகள் இயக்குநர் திரு மகரபூஷணம், இஆப., தொழில் துறை கூடுதல் செயலாளர் திரு எம்.எஸ் சண்முகம் இஆப., கால்நடை பராமரிப்புத்துறை இயக்குநர் திரு.ஆபிரகாம், இஆப., பொது சுகாதாரத் துறை இயக்குநர் திரு குழந்தைசாமி ஆகியோர் கடலூர் மாவட்டத்தில் முகாமிட்டு நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில், ஊரகப் பகுதிகளில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25000 பேர், நகரப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட 4000 பேர் என மொத்தம் 29000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. நகரப் பகுதிகளில் மூன்று பொது சமையல் கூடங்களும், கிராமப் பகுதிகளில் எட்டு பொது சமையல் கூடங்களும் இயங்கி வருகின்றன. இப்பணிகளை ஒருங்கிணைப்பதற்காக தலா 2 துணை ஆட்சியர்கள் தலைமையில், 5 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நான்கு துணை ஆட்சியர்கள் மற்றும் 23 சார் நிலை அலுவலர்கள் கொண்ட குழுக்கள், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களிலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பெருமழை காரணமாக 2000 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அதன் காரணமாக பெரும்பாலான கிராமங்களில் மின் விநியோகம் தடைபட்டது.

கடலூர் மாவட்டத்தில் 8 கூட்டுக் குடிநீர் திட்டங்களில், 7 திட்டங்களுக்கான மின் ஊட்டிகளும், 180 ஊரக மின் ஊட்டிகளில் 153ம், நகரப் பகுதிகளில் உள்ள அனைத்து 51 மின் ஊட்டிகளும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு சீரான முறையில் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மின் விநியோகத்தை சீரமைக்க, வெளி மாவட்டங்களிலிருந்து 2000 மின் வாரிய ஊழியர்கள் கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேற்காணும் பணிகளை மின் வாரிய தலைவர் தலைமையில், தலைமைப் பொறியாளர் மற்றும் சார் நிலை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளத்தால் மின் விநியோகம் தடைப்பட்டிருந்த 683 கிராம ஊராட்சிகளில், 430 கிராம ஊராட்சிகளில் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டு, தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. எஞ்சியுள்ள கிராமப் பகுதிகளுக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மின் விநியோகம் சீர் செய்யப்பட்டு வருகிறது.

 மின் விநியோகம் தடைபட்டிருந்த போது ஜெனரேட்டர்கள் மூலம் நகரப் பகுதிகளில் பொது மக்களுக்கு குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்பட்டது. இன்னமும் மின் விநியோகம்  சீர் செய்யப்படாத கிராம ஊராட்சிகளில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலமாக ஜெனரேட்டர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இப்பகுதிகளில் குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத் துறை இயக்குநர் தலைமையில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மற்றும் இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) ஆகியோர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. 37 நகரும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு தொற்றுநோய் ஏற்படாவண்ணம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பழுதடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் நெடுஞ்சாலைத் துறை மூலமாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரவனாற்றில் வெள்ளம் ஏற்பட்ட காரணத்தால் வடலூர் - கும்பகோணம் நெடுஞ்சாலைப் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையில் தண்ணீரை உடனடியாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் வடிந்ததும், முறையாக பயிர் சேதத்தினை ஆய்வு செய்து நான் ஏற்கெனவே அறிவித்த நிவாரண தொகையை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

கடலூர் மாவட்டம், தேவனாம்பட்டினம் மீன்பிடி கிராமத்திலிருந்து சுமார் 100 FRP வல்லங்கள் கெடிலம் ஆற்று வெள்ளத்தினால் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. கடலோர பாதுகாப்புப் படை உதவியுடன் நேற்றும், இன்றும் வான்வழித் தேடுதல் மேற்கொள்ளப்பட்டதில், இரண்டு இடங்களில் சுமார் 40 வல்லங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு கடலோர காவல் படையுடன் இணைந்து மாநில மீன்வளத் துறை மேற்கொண்டுள்ளது.

கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கடலூர் மாவட்டத்தில் 90 கால்நடை மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவை கால்நடைகளுக்கு உரிய தடுப்பூசி போடுவதுடன் தேவையான சிகிச்சையையும் அளித்து வருகின்றன

. தற்போதைய வடகிழக்கு பருவமழை வெள்ளத்தில் கடலூர் மாவட்டத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவித் தொகையை உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். அதே போன்று கால்நடை இழப்பு மற்றும் குடிசைகள் சேதங்கள் ஆகியவற்றுக்கும் நிவாரண உதவிகளை உடனுக்குடன் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை மேலும் துரிதப்படுத்தவும், மேற்பார்வையிடவும் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கவும் மாண்புமிகு நிதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.நத்தம் இரா. விசுவநாதன், மாண்புமிகு வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்  துறை அமைச்சர் திரு. ஆர். வைத்திலிங்கம், மாண்புமிகு மீன்வளத் துறை அமைச்சர் திரு. கே.ஏ.ஜெயபால், மாண்புமிகு வருவாய்த் துறை அமைச்சர் திரு. ஆர்.பி. உதயகுமார் ஆகியோரை கடலூர் மாவட்டத்திற்கு நான் அனுப்பி வைத்துள்ளேன்.

இதர மாவட்டங்களிலும் மழை பாதிப்பு இல்லாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சேதங்கள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்


Tamil Nadu Small Industries Corporation (TANSI) - Vacancy Notification for the post of Chemist

Vacancy Available

Advertisement No. 213/EB1/2010

Applications are invited from eligible candidates for one post of CHEMIST


Number of vacancies01 [General Turn]
Qualification :

Graduate in Chemistry from a recognized University.
Experience :

Post-qualification experience of 2 years in Government or Public Sector Undertaking in the field of paint and allied products manufacturing process.
Scale /Pay Band :

PB2 - Rs. 9,300-34,800 + G.P. Rs.4,300/- with Dearness Allowance and other usual Allowances as applicable to the post.
Place of Posting : Chennai.
Age :
Catogery
SC/ST
MBC
BC
BC(M)
OC
Age Limit as on 1.1.2015
35
32
32
32
30

Last date for receipt of application: 30.11.2015


Application form may be downloaded from the Website of TANSI or obtained from the Manager (Administration) in person. The filled up application along with a Passport size photo and photo copies of testimonials may be sent by post duly addressed to the General Manager, TANSI, A-28, Thiru-Vi-Ka Industrial Estate, Chennai – 600032 to reach him before 30.11.2015 Afternoon.

Download Application form




CM Statement on Administrations to gear up for rains

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் வடகிழக்கு பருவமழையால் பாதிப்புகள் எதுவும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசு உயர்அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார்கள். இதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை, பொதுப் பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, போக்குவரத்துத் துறை, மின்வாரியம், காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறை ஆகிய துறைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டுவருகின்றன.

வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த மண்டலத்தின் காரணமாக தமிழகத்தின் வடக்குப் பகுதியிலுள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.

சென்னை மாநகரில் 131 பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் சென்னை மாநகராட்சி நிர்வாகம் 4000க்கும் மேற்பட்ட களப்பணியாளர்களைக் கொண்டு பம்புகள் மூலம் மழை நீர் வெளியேற்றியது. மேலும், சாலைகளில் விழுந்துகிடந்த 125 மரங்கள் அகற்றப்பட்டு சாலை போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. குறிப்பாக பொது மக்கள் தீபாவளிக்காக பல்வேறு பொருள்களை வாங்கும் கடைவீதிகளில் சீரான போக்குவரத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தாழ்வான பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட குடிசைவாழ் மக்களுக்கு 8000 உணவு பொட்டலங்கள் வினியோகம் செய்யப்பட்டன. சென்னை மாநகராட்சியிலும் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு நிவராணப்பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவின் பேரில் சென்னை மாநகரில் மழை நிவாரணப் பணிகளை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை அமைச்சர் திரு எஸ் பி வேலுமணி, மாண்புமிகு சமூக நலத் துறை அமைச்சர்

திருமதி பா வளர்மதி, மாண்புமிகு கைத்தறி (ம) துணிநூல் துறை அமைச்சர் திருமதி எஸ் கோகுல இந்திரா, மாநகராட்சி மேயர் திரு சைதை துரைசாமி, மாநகராட்சி ஆணையர் திரு விக்ரம் கபூர், இஆப மற்றும் உயர் அதிகாரிகள் மழைநீரை அகற்றும் பணிகளைப் மேற்பார்வையிட்டு சீரமைப்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். இந்திய வானிலை மையம் அறிக்கையின்படி வங்கக் கடலில் உருவாகியுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலூருக்கு அருகிலேயே நிலை கொண்டு மாலை 8.45 மணியளவில் கரையை கடந்தது. இதனால் கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடர்ந்து அதிகளவில் மழை பெய்யும் என்றும் வேலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒரளவிற்கு மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் மணிக்கு 45கி மீ முதல் 55 கி மீ வேகத்தில் காற்று வீசிக்கொண்டு இருக்கிறது.

இன்று (9.11.2015) காலை முதல் கடலூர் மாவட்டத்தில் 13.7 செ.மீ மழை பெய்துள்ளது. பரங்கிப்பேட்டையில் அதிகபட்சமாக 32 செ.மீ மழை பெய்துள்ளது. தமிழ் நாடு மின்சார வாரியம் முன்னெச்சரிக்கை

நடவடிக்கையாக இன்று காலையிலிருந்து கடலூர் மாவட்டத்தில் மின்சாரத்தை துண்டித்துள்ளது. மாலையிலிருந்து படிப்படியாக மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. பண்ருட்டி வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 650 நபர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விருத்தாச்சலம் வட்டத்திலுள்ள வடக்கு வேலூர் கிராமம் மழை நீரால் சூழப்பட்டதால் 150 குடும்பங்கள் மேடான பகுதியில் அமைந்துள்ள சமுதாயக் கூடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவின்பேரில் அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் நிவாரணக்குழு கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கெடிலம் நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவின்பேரில் பொதுப் பணித்துறை கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு கரையோரங்களில் வாழும் குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவின்பேரில் கடலூர் மாவட்டத்தில் குடிநீர் மற்றும் பால் விநியோகம் எவ்வித தடங்கலுமின்றி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடலூர் மாவட்டத்தில் நிவராணம் மற்றும் சீரமைப்புப்பணிகளை மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு எம் சி சம்பத், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாண்புமிகு கால்நடை பாரமரிப்புத் துறை அமைச்சர் திரு டி கே எம் சின்னையா, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் துறை அதிகாரிகள் மழை நீர் அகற்றல் மற்றும் போக்குவரத்து சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளுர் மாவட்டத்தில் மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர் திரு பி வி ரமணா, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் துறை அதிகாரிகள் மழை நீர் அகற்றல் மற்றும் போக்குவரத்து சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து செல்லும் போது திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பதால் இம்மாவட்டங்களின் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை ஒருங்கிணைக்க மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை அனுப்ப உத்தரவிட்டதின் பேரில் கடலூர் மாவட்டத்திற்கு திரு ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு திரு பிரதீப் யாதவ் இ.ஆ.ப, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு திரு ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப ஆகியோர் அனுப்பப்பட்டுள்ளனர். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உத்தரவின்பேரில் வடக்கு மண்டல காவல் துறைத் தலைவர் திரு மஞ்சுநாதா இ.கா.ப அவர்கள் கடலூரில் முகாமிட்டுள்ளார்.