Thursday, October 29, 2015

TN Minister for Sports and Youth Welfare inaugurated the State Games for Chief Ministers Trophy at Chennai


CM paid floral tributes to Pasumpon Muthuramalinga Thevar on his 108th Birth anniversary


CM chaired a meeting to review the progress of activities of various Departments


Chief Minister on the occasion of World Thrift Day-2015

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் உலக சிக்கன நாள் செய்தி

 மக்களிடையே சிக்கன உணர்வினை ஏற்படுத்தி, சேமிக்கும் பழக்கத்தை வளர்க்கும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் 30-ஆம் நாள் உலக சிக்கன நாளாகக் கொண்டாடப்படுகிறது.

“இன்றைய சேமிப்பு நாளைய வாழ்வின் பாதுகாப்பு” என்பதற்கேற்ப எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ்ந்திட பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதலே சேமிப்பின் அவசியத்தை எடுத்துரைத்து, அவர்களது சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். இதன்மூலம் சிறுகச் சிறுக சேமித்த தொகை, பெருந்தொகையாகி அவசர காலங்களில் ஏற்படும் எதிர்பாரா செலவினங்களை மேற்கொள்ள உதவும்.

மக்கள் தங்கள் கடின உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தங்களது குடும்பத்திற்கு பயன்படும் வகையில் சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வதால், அந்த தொகைக்கு உத்தரவாதமும், எதிர்கால வாழ்க்கைக்கு பாதுகாப்பும் கிடைத்திடும்.  “சிறுகக் கட்டி பெருக வாழ்” என்பதனை உணர்ந்து, தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வாழ்வு வளம்பெற அருகிலுள்ள அஞ்சலகங்களில் தொடர் சேமிப்புக் கணக்கினைத் துவக்கிட வேண்டுமென இந்த உலக சிக்கன நாளில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்


Sunday, October 25, 2015

Employment and Training Department, R.K.Nagar on the Admission Notification

the Employment and Training Department, R.K.Nagar on the admission notification to ITI Courses - Fitter, Electrician, MMV

R.K. நகரில் துவங்கப்பட உள்ள புதிய தொழிற் பயிற்சி நிலைய மாணவர் சேர்க்கை பற்றிய பத்திரிக்கைச் செய்திக் குறிப்பு

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்திரவுக்கிணங்க சென்னை R.K. நகரில் இந்தாண்டு முதல் புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையம் தொடங்கப்படவுள்ளது.

இப்புதிய அரசு தொழிற் பயிற்சி நிலையம் சென்னை மாவட்டம் R.K. நகரில் இருசப்பன் தெரு புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக செயல்படும்.

இத்தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர்வதற்கு கீழ்க்கண்ட தகுதிகள் பெற்ற ஆண்/பெண் இருபாலரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வ.எண்.தொழிற் பிரிவுபயிற்சிக்காலம்கல்வித்தகுதி
1)பிட்டர் (Fitter)2 ஆண்டுகள்10 ஆம் வகுப்பு தேர்ச்சி
2)எலக்ட்ரீசியன் (Electrician)2 ஆண்டுகள்10 ஆம் வகுப்பு தேர்ச்சி
3)கம்மியர் மோட்டர் வாகனம் (MMV)2 ஆண்டுகள்10 ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு : 
 ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை. மகளிருக்கு வயது உச்ச வரம்பு இல்லை.

பயிற்சிக் கட்டணம் : 
 பயிற்சிக்கட்டணம் இல்லை

உதவித்தொகை:
  மாதந்தோறும் ரூ.500/- உதவித்தொகை அனைவருக்கும் வழங்கப்படும்.

மாணவ/மாணவியருக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள்:

  விலையில்லா லேப்டாப், விலையில்லா சைக்கிள், விலையில்லா புத்தகம், விலையில்லா வரைபடக்கருவி, விலையில்லா சீருடை, விலையில்லா காலணி ஆகியவை வழங்கப்படும்.

 பயிற்சிகளில் சேர விரும்பும் மாணவ/மாணவியர்கள் விண்ணப்பப் படிவங்களை கீழ்க்கண்ட இடங்களில் பெற்று பூர்த்தி செய்து அங்கேயே சமர்ப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ.50/-. கடைசி நாள் :11 .11.2015.
1) முதல்வர்,
அரசு தொழிற் பயிற்சி நிலையம்,
சென்னை நடுநிலைப்பள்ளி ,
இருசப்பன் வீதி,
புதுவண்ணாரப்பேட்டை,
சென்னை மாவட்டம்.
2) துணை இயக்குநர்/முதல்வர்,
அரசு தொழிற் பயிற்சி நிலையம்,
வடசென்னை,
சென்னை மாவட்டம்.

மாணவ/மாணவியர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 இயக்குநர்
 வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை