Wednesday, May 12, 2021

CM Public Relief Fund (CMPRF) Towards Relief Operations of COVID-19

Appeal from the Honble Chief Minister for contributions to Chief Ministers Public Relief Fund (CMPRF) towards relief operations of COVID-19 - Tamil Version

செய்தி வெளியீடு எண்‌: 034 

நாள்‌:11.05.2021

“முதலமைச்சரின்‌ பொது நிவாரணநிதிக்கு தாராள நிதி வழங்குவீர்‌!”

“நன்கொடை - செலவினங்கள்‌ பொதுவெளியில்‌ வெளியிடப்படும்‌”

- பொதுமக்கள்‌, சமூகநல அமைப்புகள்‌, பெருந்தொழில்‌ நிறுவனங்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ வேண்டுகோள்‌.

அன்புடையீர்‌,

      கோவிட்‌ தொற்றின்‌ இரண்டாவது அலையால்‌ நமது மாநிலம்‌ வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதை நீங்கள்‌ அனைவரும்‌ அறிவீர்கள்‌. தற்போது நமது மாநிலத்தில்‌ 1,52,389 பேர்‌ இத்தொற்றிற்காக சிகிச்சை பெற்றுவருகிறார்கள்‌. இவர்களில்‌ 31,410 பேர்‌ ஆக்சிஜன்‌ உதவியோடு சிகிச்சை பெற்று வருகிறார்கள்‌. இந்த அலை நமது மாநிலத்தின்‌ மருத்துவக்‌ கட்டமைப்பின்மீதும்‌ மக்கள்மீதும்‌ கடும்‌ தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வரலாறு காணாத இந்தச்‌ சவாலை சமாளிக்கவும்‌, மக்களின்‌ வாழ்வையும்‌ வாழ்வாதாரத்தையும்‌ பாதுகாக்கவும்‌, நமது அரசு அனைத்து முயற்சிகளையும்‌ மேற்கொண்டு வருகின்றது. மருத்துவமனைகளில்‌ உள்ள படுக்கைகளின்‌ எண்ணிக்கையை உயர்த்துதல்‌, அனைத்து உயிர்‌ காக்கும்‌ மருந்துகளையும்‌ தடையின்றி கிடைக்கச்‌ செய்தல்‌, ஆக்சிஜன்‌ விநியோகத்தை மேம்படுத்துதல்‌, கூடுதல்‌ மருத்துவ மற்றும்‌ பிற பணியாளர்களைப்‌ பணி அமர்த்துதல்‌ போன்ற பல்வேறு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

       இந்த நோய்த்‌ தொற்றால்‌ பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின்‌ பொருளாதாரம்‌ மீண்டெழுவதற்கு சிரமப்பட்டுவரும்‌ நிலையில்‌ இந்தப்‌ பேரிடரை எதிர்கொள்வதற்கு நமது அரசு கூடுதலான நிதி ஆதாரங்களைச்‌ செலவிட வேண்டிய தேவையும்‌ உள்ளது. எனவே, அரசின்‌ முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின்‌ ஒவ்வொரு பிரிவினரும்‌ தங்களால்‌ இயன்ற வகையில்‌ உதவி செய்ய வேண்டியது அவசியம்‌. 

      இச்சூழலில்‌ முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று உங்கள்‌ அனைவருக்கும்‌ தனிப்பட்ட முறையில்‌ வேண்டுகோள்‌ விடுக்கின்றேன்‌. 

      இப்பேரிடர்‌ காலத்தில்‌ தாங்கள்‌ ஒவ்வொருவரும்‌ அளிக்கக்கூடிய நன்கொடைகள்‌ அனைத்தும்‌, ஆக்சிஜன்‌ உற்பத்தி மற்றும்‌ சேமிப்பு நிலையங்கள்‌ அமைத்தல்‌, ஆக்சிஜன்‌ வசதிகளுடன்கூடிய படுக்கைகளை அமைத்தல்‌, ஆக்சிஜன்‌ செரிவூட்டும்‌ இயந்திரங்கள்‌, ஆர்‌.டி.பி.சி.ஆர்‌. கிட்டுகள்‌, உயிர்காக்கும்‌ மருந்துகள்‌, தடுப்பூசிகள்‌ மற்றும்‌ பிற மருத்துவக்‌ கருவிகளை வாங்குதல்‌ போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப்‌ பயன்படுத்தப்படும்‌ என நான்‌ உறுதி அளிக்கிறேன்‌. மேற்கூறிய நடவடிக்கைகளுக்காக பெறப்பட்ட நன்கொடை விவரங்கள்‌ மற்றும்‌ இந்த நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள்‌ குறித்த விவரங்கள்‌ அனைத்தும்‌ வெளிப்படையாக பொதுவெளியில்‌ வெளியிடப்படும்‌ என்பதையும்‌ தெரிவித்துக்‌ கொள்கின்றேன்‌.

       இவ்வாறு அளிக்கப்படும்‌ நன்கொடைகளுக்கு வருமான வரிச்‌ சட்டம்‌ பிரிவு 80(6)-ன்கீழ்‌ 100 விழுக்காடு வரிவிலக்கு உண்டு. வெளிநாடு வாழ்‌ இந்தியர்கள்‌ (41515) அல்லது வெளிநாட்டு மக்களிடமிருந்து பெறப்படும்‌ நிவாரணத்திற்கு அயல்‌ நாட்டு பங்களிப்பு (ஒழுங்காற்று) சட்டம்‌ 2010, பிரிவு 50-ன்கீழ்‌ விலக்களிக்கப்படும்‌

(இந்திய உள்துறை அமைச்ச ஆணை எண்‌.F.No.II/21022/94(1124)/2015-FCRA-III, நாள்‌ 22.12.2015.)

நன்கொடைகளை மின்னணு முறை மூலம்‌ பின்வருமாறு வழங்கலாம்‌.

i. வங்கி இணைய சேவை அல்லது கடன்‌ அட்டை / பற்று அட்டையின்‌ மூலமாக கீழ்க்கண்ட இணையதளம்‌ வழியாகச்‌ செலுத்தி இரசீதினைப்‌ பெற்றுக்கொள்ளலாம்‌.

https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html

Electronic Cleaning System (ECS) /RTGS /NEFT  மூலமாக கீழ்க்காணும்‌ இந்தியன்‌ ஒவர்சீஸ்‌ வங்கிக்கு நேரடியாக அனுப்பலாம்‌.


vi. மின்னணு மூலம்‌ பரிவர்த்தனை செய்ய இயலாதவர்கள்‌ குறுக்குக்‌ கோடிட்ட காசோலை அல்லது வங்கி வரைவோலை மூலமாக, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்‌:-

அரசு இணைச்‌ செயலாளர்‌ மற்றும்‌ பொருளாளர்‌,

முதலமைச்சர்‌ பொது நிவாரண நிதி,

நிதித்துறை, தமிழ்நாடு அரசு,

தலைமைச்‌ செயலகம்‌,

சென்னை - 600 009, தமிழ்நாடு, இந்தியா.

மின்னஞ்சல்‌ முகவரி jscmprf@tn.gov.in

     தற்போதைய நோய்‌ தொற்று நிலையில்‌, நேரிடையாக மாண்புமிகு முதலமைச்சரிடமோ, அரசு அலுவலர்களிடமோ நன்கொடை வழங்குவதை தவிர்க்க வேண்டும்‌. எனினும்‌, 10 லட்சம்‌ ரூபாய்க்கு மேல்‌ நிதியுதவி செய்யும்‌ நபர்கள்‌/ நிறுவனங்களின்‌ பெயர்கள்‌ பத்திரிகை செய்தியாக வெளியிடப்படும்‌. பெறப்படும்‌ அனைத்து நன்கொடைகளுக்கும்‌ உரிய இரசீதுகள்‌ அனுப்பி வைக்கப்படும்‌.

      மேற்கூறிய முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும்‌ நன்கொடைகள்‌ தவிர, நிறுவனங்களின்‌ சமூகப்‌ பொறுப்பு (Corporate Social Responsibility (CSR))-ன்கீழ்‌ கொரோனா நிவாரணத்திற்காக நிதியுதவி வழங்கும்‌ நிறுவனங்கள்‌, மாநிலப்‌ பேரிடர்‌ மேலாண்மை அமைப்பின்‌ கீழ்காணும்‌ வங்கிக்‌ கணக்கில்‌ செலுத்தலாம்‌.

வங்கி பெயர்‌                                 - இந்தியன்‌ ஓவர்சீஸ்‌ வங்கி

கிளை                                           - தலைமைச்‌ செயலகம்‌,

சென்னை                                     - 600 009

சேமிப்புக்‌ கணக்கு எண்‌               - 117201000017908

IFSC code                                      -  IOBA0001172


இந்த நன்கொடைகளும்‌ மாநில அரசால்‌ மேற்கொள்ளப்படும்‌ கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப்‌ பயன்படுத்தப்படும்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, 

சென்னை-9


>>For More Details Click here 

 

Tuesday, May 11, 2021

24/7 HelpLine Numbers for Continuous Process Industries

 24/7 HelpLine Numbers for Continuous Process Industries and other Industries manufacturing Essential Commodities.

செய்தி வெளியீடு எண்‌: 033 

நாள்‌:11.05.2021


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ ஆணைக்கிணங்க, அத்தியாவசிய தொழிற்சாலைகள்‌ மற்றும்‌ நிறுவனங்களுக்கு உதவிட 24/7 தொலைபேசி வழி உதவி சேவை மையம்‌ அமைத்தல்‌.

       கோவிட்‌ பெருந்தொற்று முழு ஊரடங்கு தொடர்பாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌, 9.5.2021 அன்று தலைமைச்‌ செயலகத்தில்‌ தொழில்‌ சங்கத்தினர்களுடன்‌ கலந்தாலோசனை மேற்கொண்டார்கள்‌. அக்கூட்டத்தில்‌ கலந்துகொண்ட தொழில்‌ சங்கங்களின்‌ பிரதிநிதிகள்‌ விடுத்த கோரிக்கையின்‌ அடிப்படையில்‌, இந்த முழு ஊரடங்கு காலகட்டத்தில்‌ தொடர்‌ செயல்முறை தொழிற்சாலைகள்‌ (Continuous process Industries), அத்தியாவசிய பொருட்கள்‌ தயாரிக்கும்‌ தொழிற்சாலைகள்‌ (Essential Commodities) மற்றும்‌ கட்டுமானப்‌ பணிகள்‌ ஆகியவை தொடர்ந்து செயல்படுவதில்‌ ஏற்படும்‌ இடர்பாடுகளை களையும்‌ பொருட்டு 24/7 தொலைபேசி வழி உதவி சேவை மையம்‌ தொடங்க மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ உத்திரவிட்டதன்‌ அடிப்படையில்‌, தமிழ்நாடு அரசின்‌ தொழில்‌ துறை ஓர்‌ உதவி சேவை மையத்தினை தொடங்கியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள்‌ மற்றும்‌ நிறுவனங்கள்‌ தங்களுக்கு ஏற்படும்‌ பிரச்சினைகள்‌/சந்தேகங்கள்‌ மற்றும்‌ தேவையான உதவிகளுக்கு கீழ்க்கண்ட அலுவலர்களின்‌ அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்‌.

     மேலும்‌ இது தொடர்பாக covidsupport@investtn.in என்ற மின்னஞ்சல்‌ முகவரியையும்‌ அணுகலாம்‌.


வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, 

சென்னை-9

G.O of Food and Consumer Protection Department about COVID 19 Relief Fund

சுருக்கம்‌

     பொது விநியோகத்‌ திட்டம்‌ - கொரோனா வைரஸ்‌ நோய்‌ தொற்று - நிவாரண உதவிகள்‌ - மே 2021 மாதத்தில்‌ அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும்‌ ரூ.2000/- நிவாரணத்‌ தொகை வழங்குதல்‌ -ஆணைகள்‌ வெளியிடப்படுகின்றன.


கூட்டுறவு, உணவு மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்‌ ( எப்‌) துறை


அரசாணை (நிலை) எண்‌.37 

நாள்‌ : 07.05.2021

பிலவ வருடம்‌, சித்திரை-24

திருவள்ளுவர்‌ ஆண்டு 2052


படிக்க:

அரசாணை (நிலை எண்‌.364, வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மை

துறை, நாள்‌ 03.05.2021.

ஆணை:

       தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவை தேர்தல்‌-2021 தொடர்பாக வெளியிட்டுள்ள தேர்தல்‌ அறிக்கையில்‌, கொரோனா அச்சுறுத்தல்‌ மீண்டும்‌ திரும்பி உள்ள நிலையில்‌, கட்டுப்பாடுகளும்‌ மக்களின்‌ துயரங்களும்‌ தொடர்வதால்‌ தமிழக மக்களின்‌ துன்பங்களைப்‌ போக்குவதற்கு, அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள்‌ அனைத்திற்கும்‌ ஆறுதல்‌ அளிக்கும்‌ வகையில்‌ முத்தமிழறிஞர்‌ கலைஞர்‌ அவர்களின்‌ பிறந்த திருநாள்‌ முதல்‌ ரூ.4000/- வழங்கப்படும்‌ என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ உறுதியளித்துள்ளார்கள்‌.

      தமிழ்நாட்டில்‌ நாளுக்கு நாள்‌ அதிகரித்து வரும்‌ கொரோனா நோய்ப்‌ பரவலைக்‌ கருத்தில்‌ கொண்டும்‌, நோய்ப்‌ பரவலைத்‌ தடுக்க மத்திய அரசின்‌ உள்துறை அமைச்சகம்‌ மற்றும்‌ சுகாதாரம்‌ மற்றும்‌ குடும்பநலத்துறை அமைச்சகம்‌ பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில்‌ கொண்டும்‌, தமிழ்நாட்டில்‌ நோய்த்‌ தடுப்பு நடவடிக்கைகளை மேலும்‌ தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின்‌ அடிப்படையில்‌ 06.05.2021 காலை 4.00 மணி முதல்‌ 20.05.2021 காலை 4.00 மணி வரையிலான காலத்திற்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மேலே படிக்கப்பட்ட அரசாணையில்‌ ஆணைகள்‌ வெளியிடப்பட்டுள்ளன.

Honble Minister For Fisheries and Animal Husbandry Chaired Review Meeting

Honble Minister for Fisheries – Fishermen Welfare and Animal Husbandry chaired a review meeting of the department.

செய்தி வெளியீடு எண்‌: 029 

நாள்‌:10.05.2021

பத்திரிக்கை செய்தி

கால்நடை பராமரிப்புத்துறை

      தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு மற்றும்‌ மருத்துவப்‌ பணிகள்‌ இயக்குநர்‌ அலுவலக மாநாட்டுக்‌ கூட்ட அரங்கத்தில்‌ 10.05.2021 அன்று மாண்புமிகு மீன்வளம்‌ - மீனவர்‌ நலத்துறை மற்றும்‌ கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்‌ திரு.அனிதா.ஆர்‌.ராதாகிருஷ்ணன்‌ அவர்கள்‌ தலைமையில்‌ துறையின்‌ செயல்பாடுகள்‌ குறித்து ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது. இவ்வாய்வுக்‌ கூட்டத்தில்‌ கால்நடை பராமரிப்பு, பால்வளம்‌ மற்றும்‌ மீன்வளத்துறை முதன்மைச்‌ செயலாளர்‌ டாக்டர்‌ கே.கோபால்‌, இ.ஆ.ப., கால்நடை பராமரிப்பு மற்றும்‌ மருத்துவப்‌ பணிகள்‌ இயக்குநர்‌, திரு அ.ஞானசேகரன்‌, இ.ஆ.ப., தலைமை அலுவலக கூடுதல்‌ இயக்குநர்கள்‌, இணை இயக்குநர்கள்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

        மாண்புமிகு மீன்வளம்‌ - மீனவர்‌ நலத்துறை மற்றும்‌ கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ கால்நடை பராமரிப்புத்துறையால்‌ செயல்படுத்தப்படும்‌ பல்வேறு பணிகள்‌ மற்றும்‌ திட்டங்கள்‌ குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்‌. மாண்புமிகு மீன்வளம்‌ - மீனவர்‌ நலத்துறை மற்றும்‌ கால்நடை பராமரிப்புத்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌ கிராமபுற பொருளாதார முன்னேற்றத்திற்கு கால்நடைகளின்‌ பங்கு மிக முக்கிய இடம்‌ அளிப்பதால்‌, தற்போது உள்ள கொரோனா பெருந்தொற்று சூழலிலும்‌ கால்நடை வளர்போர்‌ பாதிக்கா வண்ணம்‌ கால்நடை பராமரிப்புத்துறையின்‌ செயல்பாடுகள்‌ அமைய வேண்டும்‌ என அறிவுறுத்தினார்‌.

       மாண்புமிகு தமிழக முதல்வர்‌ அவர்களின்‌ ஆணைக்கு இணங்க விவசாய பெருமக்கள்‌ பயன்பெரும்‌ வகையில்‌ புதிய தொழில்நுட்ப யுக்திகள்‌ மூலம்‌ தேவையான மாற்றங்கள்‌ கால்நடை துறையில்‌ மேற்கொண்டு விவசாயிகளின்‌ வாழ்வாதாரத்தை பெருக்கிடும்‌ வகையில்‌ துறை அலுவலர்கள்‌ பணி புரியும்‌ படி அறிவுறித்தினார்‌.

       மாண்புமிகு தமிழக முதல்வர்‌ அவர்கள்‌ வேலை வாய்ப்பினை அதிகரிக்க அறிவுறுத்தியதன்‌ அடிப்படையில்‌ கால்நடை பராமரிப்புத்துறையில்‌ அனைத்து நிலைகளிலும்‌ காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட உள்ள தடைகளை உடனடியாக நீக்கி, வேலைவாய்ப்புகளை உருவாக்க வழி வகை செய்திட அறிவுறித்தினார்‌.

       மேலும்‌ புதிய தொழில்நுட்ப அணுகுமுறையின்‌ மூலம்‌ கால்நடை வளர்போருக்கு அவர்களின்‌ வாழ்வாதாரத்தை முன்னேற்றி அவர்களின்‌ விருப்பத்திற்கேற்ப பெண்‌ கன்றுகளை உருவாக்கிட வழி வகை செய்ய வேண்டும்‌ எனவும்‌ மேலும்‌ விவசாயிகளின்‌ வருமானத்தை பெருக்கி அவர்களின்‌ வாழ்வாதாரத்தை உயர்த்திட துறையிலுள்ள பணியாளர்கள்‌ திறம்பட பணிபுரிய அறிவுறித்தினார்‌.


வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, 

சென்னை-9

Honble Governor appointed Thiru. K. Pitchandi as Speaker

 Honble Governor appointed Thiru. K. Pitchandi as Speaker Pro-tem for the 16th Tamil Nadu Legislative Assembly.

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY

PRESS RELEASE


Thiru. K. Pitchandi, Speaker Pro-tem appointed by the Honble Governor solemnly affirmed in Tamil Nadu today (10.5.2021) at 11.00 A.M. before the Honble Governor at Raj Bhavan, Guindy, Chennai-600022 as a Member of the Sixteenth Tamil Nadu Legislative Assembly.

Honble Chief Minister, Honble Ministers and the Chief Secretary to Government were present.


Secretariat, K SRINIVASAN,

Chennai-600009. Secretary.

Dated: 10.5.2021


தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவை

     மாண்புமிகு ஆளுநர்‌ அவர்களால்‌ தற்காலிகப்‌ பேரவைத் தலைவராக  நியமிக்கப்பட்டுள்ள திரு. கு. பிச்சாண்டி அவர்கள்‌, இன்று (10.05.2021) காலை 11.00 மணிக்கு சென்னை -600022, கிண்டியிலுள்ள ஆளுநர்‌ மாளிகையில்‌, மாண்புமிகு ஆளுநர்‌ முன்னிலையில்‌, பதினாறாவது சட்டமன்றப்‌ பேரவை உறுப்பினராக உளமார உறுதிமொழியை தமிழில்‌ எடுத்துக்கொண்டார்கள்‌.

   அவ்வமயம்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌, மாண்புமிகு அமைச்சர்கள்‌ மற்றும்‌ தலைமைச்‌ செயலாளர்‌ ஆகியோர்‌ வருகைப்‌ புரிந்தனர்‌.


தலைமைச்‌ செயலகம்‌, கி. சீனிவாசன்‌,

சென்னை-600 009, செயலாளர்‌.

நாள்‌: 10.5.2021