Tuesday, August 10, 2021

Statement from Tamil Nadu Civil Supplies Corporation

 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ ஆணைப்படி, கடந்த 5.08.2021 அன்று வேலூர்‌ மாவட்டத்தில்‌ மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர்‌ மற்றும்‌ மாண்புமிகு உணவு மற்றும்‌ உணவுப்‌ பொருள்‌ வழங்கல்துறை அமைச்சர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ உணவுப்‌ பொருள்‌ விநியோகம்‌ தொடர்பான ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

 இந்த ஆய்வுக்‌ கூட்டத்தின்‌ போது விவசாயிகளிடமிருந்து ராணிப்பேட்டை மாவட்டத்தில்‌ நெல்‌ கொள்முதல்‌ நிலையங்களில்‌ நெல்‌ மகசூலைக்‌ காட்டிலும்‌ மிக அதிகமாக நெல்‌ கொள்முதல்‌ செய்யப்படுவதாகவும்‌, வியாபாரிகளிடமிருந்து நெல்‌ கொள்முதல்‌ செய்யப்படுவதாகவும்‌ சில சமயங்களில்‌ நெல்‌ மூட்டைகள்‌ லாரிகளில்‌ கொண்டுவரப்பட்டு நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்களுக்கு வராமலேயே, நேரடியாகச்‌ சேமிப்புக்‌ கிடங்குகளுக்கு அனுப்பப்படுவதாகவும்‌ புகார்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.


இப்புகாரின்‌ மீது மாண்புமிகு உணவு மற்றும்‌ உணவுப்பொருள்‌ வழங்கல்‌ துறை அமைச்சர்‌ அவர்களி உத்‌ "டி, இணை மேலாண்‌ இயக்குநர்‌, தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌ அவர்கள்‌ தலைமையில்‌ ராணிப்பேட்டை மாவட்டம்‌, ஆற்காடு வட்டத்தில்‌ உள்ள சிறுகரம்பூர்‌, தத்தாவாடி மற்றும்‌ கூரம்பாடி ஆகிய நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்களில்‌ நெல்‌ கொள்முதல்‌ செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வுக்குட்படுத்தப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இணை மேலாண்‌ இயக்குநரின்‌ முதற்கட்ட விசாரணையில்‌ சிறுகரம்பூர்‌, தத்தாவாடி மற்றும்‌ கூரம்பாடி ஆகிய நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்களில்‌ நில உடைமை ஆவணங்களைச்‌ சரியாக ஆய்வு செய்யாமல்‌ ஒருவருக்குச்‌ சொந்தமான நிலத்தில்‌ அதிகபட்சமாகக்‌ கிடைக்கக்‌ கூடிய நெல்‌ மகசூலைக்‌ காட்டிலும்‌ பல மடங்கு கூடுதலான அளவு நெல்‌ ஒரு சில நபர்களிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகளைப்‌ பின்பற்றாமல்‌ கொள்முதல்‌ செய்யப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

எனவே இத்தகைய தவறுகளுக்குக்‌ காரணமான வேலூர்‌ மண்டலத்தைச்‌ சார்ந்த தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்கழகப்‌ பணியாளர்களான மண்டல மேலாளர்‌, துணை மேலாளர்‌ (கணக்கு), 3 கண்காணிப்பாளர்கள்‌ மற்றும்‌ 3 பட்டியல்‌ எழுத்தர்கள்‌ என மொத்தம்‌ 8 நபர்கள்‌ தற்காலிகப்‌ பணிநீக்கம்‌ செய்யப்பட்டுள்ளனர்‌. இவ்விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும்‌ நேரடி நெல்‌ கொள்முதல்‌ நிலையங்களில்‌ விவசாயிகள்‌ தாங்கள்‌ விளைவித்து அறுவடை செய்த நெல்லை எளிதில்‌ விற்பனை செய்து பயனடையும்‌ வகையில்‌ பல்வேறு நடவடிக்கைகளைத்‌ தமிழ்நாடு நுகர்பொருள்‌ வாணிபக்‌ கழகம்‌ தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.


Thursday, August 5, 2021

CM inaugurated the Scheme - Makkalai Thaedi Maruthuvam

Honble Chief Minister inaugurated the Scheme - Makkalai Thaedi Maruthuvam and COVID-19 vaccination for One Lakh workers at Krishnagiri District. 

"மக்களைத்‌ தேடி மருத்துவம்‌ திட்டம்‌” மற்றும்‌ “ஒரு இலட்சம்‌ தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும்‌ திட்டம்‌” ஆகிய திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ கிருஷ்ணகிரி மாவட்டம்‌, சூளகிரியில்‌ தொடங்கி வைத்தார்‌.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (5.8.2021) கிருஷ்ணகிரி மாவட்டம்‌, சூளகிரி ஊராட்சி ஒன்றியம்‌, சாமனப்பள்ளி கிராமத்தில்‌, மக்களைத்‌ தேடி மருத்துவம்‌ திட்டத்தைத்‌ தொடங்கி வைத்தார்‌. பொதுமக்களின்‌ வீட்டிற்கே நேரடியாகச்‌ சென்று தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளைச்‌ செய்தல்‌, தேவைப்படும்‌ மருந்துகளை வழங்குதல்‌, இயன்முறைச்‌ சிகிச்சை, இயலா நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய வலி நிவாரணம்‌, ஆதரவு சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய மருத்துவச்‌ சேவைகள்‌ அளிக்கப்படும்‌.


இத்திட்டத்தின்‌ கீழ்‌, மாநிலத்தில்‌ தொற்றா நோய்களின்‌ சுமையை எதிர்கொள்ளும்‌ விதமாக நோயாளிகளின்‌ இல்லங்களுக்கே சென்று சில அத்தியாவசியமான சுகாதாரச்‌ சேவைகள்‌ வழங்கப்பட வேண்டும்‌ என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ நோக்கத்தினைச்‌ செயல்படுத்தும்‌ வகையில்‌, மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்துறை மூலம்‌ "மக்களைத்‌ தேடி மருத்துவம்‌" என்ற புதிய திட்டம்‌ தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினைத்‌ தொடங்கி வைத்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌, இரண்டு பயனாளிகளின்‌ இல்லங்களுக்கு நேரில்‌ சென்று, மருத்துவச்‌ சேவை அளிப்பதைப்‌ பார்வையிட்டு அவர்களுக்கு மருந்துகளை வழங்கினார்‌.

More to know...


Revenue Statement From Registration Department.

 பதிவுத்துறையில்‌ ஜுலை 2௦21 மாதத்தில்‌ வருவாய்‌ ரூ.1242.22 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இது சென்ற நிதியாண்டில்‌ ஜுலை 2020 மாத வருவாயை காட்டிலும்‌ ரூ.598 கோடி அதிகமாகும்‌.

மாண்புமிகு வணிகவரி மற்றும்‌ பதிவுத்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ தலைமையிலும்‌, பதிவுத்துறை அரசு செயலாளர்‌ மற்றும்‌ பதிவுத்துறை தலைவர்‌ அவர்கள்‌ முன்னிலையிலும்‌ அனைத்து மண்டலங்களிலும்‌ பணி சீராய்வு கூட்டம்‌ நடைபெற்றது. கூட்டங்களில்‌ அரசின்‌ வருவாயை எவ்வித கசிவுமின்றி வசூலிக்க முழு கவனம்‌ செலுத்த வேண்டும்‌ என்றும்‌, நிலுவை ஆவணங்களை சரியாக இருப்பின்‌ உடன்‌ விடுவித்தல்‌, தணிக்கை இழப்புகளை வசூலித்தல்‌ சரியான ஆவணங்களை தாமதமின்றி பதிவு செய்தல்‌ முதலான யுக்திகளை கையாண்டு வருவாயை பெருக்க அறிவுறுத்தப்பட் டது. இதன்‌ அடிப்படையில்‌ அலுவலர்கள்‌ செயல்பட்டதின்‌ பேரில்‌, இம்மாதத்தில்‌ வருவாய்‌ ரூ.1242.22 கோடி ஈட்டப்பட்டுள்ளது. கொரானா நோய்‌ தொற்று காரணமாகவும்‌ மற்றும்‌ அரசின்‌ ஊரடங்கு காரணமாகவும்‌ பதிவுத்துறையில்‌ கடந்த மாதங்களில்‌ வருவாயானது 2019-20 நிதியாண்டை காட்டிலும்‌ குறைந்துள்ள நிலையிலும்‌, ஜுலை 2021 மாத வருவாயானது மேலே கண்டுள்ள முயற்சிகளால்‌ பேரிடர்‌ ஏதும்‌ இல்லாத காலத்திற்கான வருவாயினை நெருங்கியுள்ளது.



Ms Bhavani Devi, Sabre Fencer called on CM

 Ms Bhavani Devi, Sabre Fencer, who had participated in the Olympics, Japan called on the Honble Chief Minister.



Statement of the Honble Minister for Law on ban for the Online Rummy

“ஆன்லைன்‌ ரம்மி விளையாட்டுக்களைத்‌ தடைசெய்யும்‌ புதிய சட்டம்‌ விரைவில்‌ கொண்டு வரப்படும்‌”- மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர்‌ திரு எஸ்‌. ரகுபதி அவர்கள்‌ அறிக்கை.

“ஆன்லைன்‌ ரம்மி விளையாட்டைத்‌ தடைசெய்ய வேண்டும்‌” என த்‌ திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌, முன்பு எதிர்க்கட்சித்‌ தலைவராக இருந்தபோது வலியுறுத்தியதைத்‌ தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர்‌ 21ஆம்‌ தேதி “ஆன்லைன்‌ ரம்மி விளையாட்டிற்குத்‌ தடை விதித்து” அவசர கதியில்‌ சட்டம்‌ ஒன்றை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியது.


அ.தி.மு.க. அரசின்‌ சட்டத்திற்கு எதிராகத்‌ தொடரப்பட்ட வழக்கில்‌, தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌ தலைமை வழக்கறிஞர்‌ வாதிட்டு, உரிய கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்து வைத்த போதிலும்‌, “இந்த விளையாட்டுகள்‌ ஏன்‌ தடை செய்யப்படுகிறது என்பது குறித்துப்‌ போதுமான காரணங்களைச்‌ சட்டம்‌ நிறைவேற்றும்‌ போது கூறவில்லை; விளையாட்டை முறைப்படுத்தும்‌ உரிய விதிகள்‌ இல்லாமல்‌ ஆன்லைன்‌ விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாகத்‌ தடை விதிக்க முடியாது” என்று கூறி, தமிழ்நாடு அரசின்‌

ஆன்லைன்‌ ரம்மி விளையாட்டினைத்‌ தடை செய்யும்‌ சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம்‌ தீர்ப்பளித்துள்ளது. ஆனாலும்‌, உரிய விதிமுறைகளை உருவாக்கிப்‌ புதிய சட்டம்‌ கொண்டு வருவதற்குத்‌ தடை ஏதுமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம்‌ இதே தீர்ப்பில்‌ தெளிவுபடுத்தியிருக்கிறது.

பொதுநலன்‌ மிக முக்கியம்‌ என்பதால்‌, உரிய விதிமுறைகள்‌ மற்றும்‌ தகுந்த காரணங்களைத்‌ தெளிவாகக்‌ குறிப்பிட்டு, எவ்விதத்‌ தாமதமுமின்றி, ஆன்லைன்‌ ரம்மி விளையாட்டுகளைத்‌ தடைசெய்யும்‌ சட்டத்தைக்‌ கொண்டுவர வேண்டும்‌ என மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ நேற்றையதினம்‌ தீர்ப்பு வெளிவந்த உடனேயே உத்தரவிட்டி ருக்கிறார்‌.

ஆகவே, மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்களின்‌ ஆணைக்கிணங்க, தமிழ்நாட்டில்‌ ஆன்லைன்‌ ரம்மி போன்ற விளையாட்டுகளைத்‌ தடைசெய்யும்‌ சட்டம்‌ விரைவில்‌ கொண்டு வரப்படும்‌ என்று தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.