Friday, October 2, 2015

Arasu Cable TV Corporation on Internet Protocol Television - IPTV and ISP Licence

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தை புனரமைத்து, புத்துயிர் அளித்து, அதன் ஒளிபரப்பு சேவையை தமிழகத்தில் சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 02.09.2011 அன்றும், சென்னை மாநகர ஒளிபரப்பு சேவையை 20.10.2012 அன்றும் துவக்கி வைத்தார்கள். குறைந்த கட்டணத்தில் நிறைவான கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு வழங்குவது இதன் நோக்கமாகும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 14.09.2015 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் “இல்லந்தோறும் இணையம்” என்ற கொள்கையின் அடிப்படையில் அனைத்து இல்லங்களுக்கும் குறைந்த செலவில் தரமான இணைய இணைப்புகளை வழங்கிடும் என்றும், அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள் மற்றும் இதர இணைய சேவைகள் ஆகியவற்றுடன் சேர்த்து, புதிதாக இணைய வழி தொலைக்காட்சி சேவைகளும்  (Internet Protocol Television – IPTV) வழங்கப்படும் என்று அறிவித்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த இத்திட்டத்தினை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுடன் இணைந்து செயல்படுத்தும். தமிழ்நாடு முழுவதும் அகண்ட அலைவரிசை சேவைகள் மற்றும் இதர இணைய சேவைகள் ஆகியவற்றை வழங்குவதற்கான உரிமத்தினை (ISP Licence) மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்த விரும்பும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள், தங்களது விருப்பத்தினை இந்நிறுவனத்தின் வலைதளத்தில் (www.tactv.in)  உள் நுழைவு (Log-in) செய்து, “இணையதள சேவைகள்”– “Internet Services”  என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பதிவினை 05.10.2015 அன்று காலை 10.00 மணி முதல் 20.10.2015 அன்று மாலை 5.00 மணி வரை மேற்கொள்ளலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

Gandhi Adigal Police Medal to Police Officials

AWARD OF GANDHI ADIGAL POLICE MEDAL TO THREE POLICE OFFICIALS

The Hon’ble Chief Minister has ordered the award of Gandhi Adigal Police Medal to (1) Thiru. K. Rajendhran, Additional Superintendent of Police, Prohibition Enforcement Wing, Thanjavur District, (2) Thiru. S. Ramamurthy, Special Sub- Inspector of Police, Pudupattinam Police Station, OD @ SB, Nagapattinam District and (3) Thiru. M. Raju, Head Constable 1834, Eriyur Police Station, OD @ Prohibition Enforcement Wing Special Party, Dharmapuri District for their outstanding work in curbing illicit liquor. The Medals will be given by the Hon’ble Chief Minister on the occasion of Republic Day, 2016. A cash award of Rs.20,000/- to each of the awardees will also be presented along with the Medal.

APURVA VARMA
PRINCIPAL SECRETARY TO GOVERNMENT


Statement of the Honble Chief Minister on account of Gandhi Jayanthi

ஏழை, எளிய நெசவாளர்கள் வாழ்வில் ஏற்றம் பெற அனைவரும் கதர் ஆடைகளை வாங்கி பயன்படுத்திட வேண்டுமென மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் வேண்டுகோள்

உயர்த்துவோம் கதர் விற்பனையை !
வாழ்விப்போம் நெசவாளர்களை !!

கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்கும், கிராமத் தொழில்களின் வளர்ச்சிக்கும் முன்னுரிமை வழங்கி வரும் தமிழ்நாடு அரசு, கதர் ஆடைகளுக்கான துணி ரகங்களை நெசவு செய்யும் கிராமப்புற ஏழை, எளிய நெசவாளர்கள் வாழ்வில் ஏற்றம் பெற பல்வேறு சீரிய திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

கிராமப்புறங்களிலுள்ள நெசவாளர்களைக் கொண்டு தற்கால நாகரிகத்திற்கேற்றவாறு புதிய வடிவமைப்புகளில் அழகிய வண்ணங்களில் மிக நேர்த்தியான முறையில் நெசவு செய்யப்படும் கதர் ஆடைகளும், கிராமங்களில் வாழும் கைவினைஞர்கள் மூலம் புதிய யுத்திகளுடன் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களும், அனைத்து கதர் நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து தரப்பு மக்களும் அணிந்திட உகந்த கதர் ஆடைகளின் விற்பனையை ஊக்குவித்திடும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்து கதர் ரகங்களுக்கும் ஆண்டு முழுவதும் 30 சதவீத தள்ளுபடி வழங்கி வருகிறது.

கதர் உற்பத்தியை அதிகரிக்க, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்திற்கு வழி வகை முன்பணமாக 10 கோடி ரூபாய் வழங்கியது, கதர் நூற்போர் மற்றும் நெய்வோர் நல வாரியத்தைச் சேர்ந்த 875 உறுப்பினர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில், கல்வி உதவி, திருமண உதவி, ஈமச் சடங்கு உதவி மற்றும் விபத்தினால் ஏற்படும் இழப்புக்கான உதவியாக 25 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் வழங்கியது, காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்திற்கும், சர்வோதய சங்கங்களுக்கும் வழங்கப்படும் தள்ளுபடி மானியத்திற்காக 2015-2016ஆம் நிதியாண்டில் 17 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

அண்ணல் காந்தியடிகள் பிறந்த இந்த இனிய நாளில், கிராமப்புற கைவினைஞர்களால் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களையும், கதர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஏழை, எளிய நெசவாளர்களின் வாழ்வு மேம்பட கதர் ஆடைகளையும் மாணவ மாணவியர்கள், அரசு ஊழியர்கள் உட்பட அனைவரும் அதிகளவில் வாங்கிப் பயன்படுத்திட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

 ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்

Wednesday, September 30, 2015

Statement of the Honble Chief Minister on World Blood Donor Day

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தேசிய தன்னார்வ ரத்த தான நாள் செய்தி

மனித உயிர் காக்கும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை பொது மக்களிடம் ஏற்படுத்திடும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ ரத்த தான நாளாக அனுசரிக்கப்படுகிறது. மனித நேய வெளிப்பாட்டின் மிகச் சிறந்த அடையாளம் ரத்ததானம் ஆகும்.

ஒவ்வொரு நாளும் ரத்தத்தின் தேவை அதிகரிப்பதால், தமிழ்நாட்டில் தன்னார்வ ரத்த தான முகாம்களை அதிகரிக்கும் நோக்கில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்றுக் குழுமம் இணைந்து தொண்டு நிறுவனங்களுக்கும், பொது மக்களுக்கும் குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வும், சிறப்பு பயிற்சியும் அளித்து வருகிறது. தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் உள்ளிட்ட 90 அரசு ரத்த வங்கிகள் மற்றும் 191 தனியார் ரத்த வங்கிகள் மூலம் கடந்த ஆண்டு 8,63,000 ரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அரசு ரத்த வங்கிகள் மூலம் மட்டும் 3,50,000 ரத்த அலகுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசு ரத்த வங்கிகளில் பெறப்படுகின்ற மொத்த ரத்த அலகுகளில் 99 விழுக்காடு தன்னார்வ ரத்த கொடையாளர்கள் மூலம் பெறப்படுகின்றன. இதன் காரணமாக தன்னார்வ ரத்த தானத்தில் நாட்டிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது.

தமிழகத்தில் அரசு ரத்த வங்கிகளின் மூலம் கடந்த ஆண்டு 4118 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு தன்னார்வ ரத்த கொடையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த ரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கும், ஒரு ஆண்டில் மூன்று முறை ரத்த தானம் செய்யும் ஆண்களுக்கும், இரண்டு முறை ரத்த தானம் செய்யும் பெண்களுக்கும் பதக்கங்களும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்து சிறப்பிக்கிறது.

நடப்பு ஆண்டில் தன்னார்வ ரத்த தானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்திடவும், விலை மதிப்பற்ற மனித உயிர்களை காத்திடவும், பொது மக்கள் பெருமளவில் ரத்த தானம் செய்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ரத்த தானம் செய்திடுவோம்!
மனித உயிர்களை காத்திடுவோம்!!

 ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்


Tuesday, September 29, 2015

Election for 496 Tamil Nadu State Co-op Societies to fill up the vacant places

496 கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் அக்டோபர்’5ல் நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் ’14-ல் வாக்குப்பதிவு மாநிலத் தேர்தல் ஆணையர் அறிவிப்பு

தமிழகத்தில் புதியதாக துவக்கப்பட்டுள்ள 146 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் 15 இதர வகை கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவர், துணைத்தலைவர் தேர்தலுடன் 335 கூட்டுறவுச் சங்கங்களில் ஏற்பட்டுள்ள நிர்வாகக்குழு உறுப்பினர்கள் காலி இடங்கள் ஆகியவற்றிற்கான தேர்தலும் அக்டோபர் ’14- ஆம் தேதி அன்றும், இதற்கான வேட்புமனுத்தாக்கல் அக்டோபர் ’5-ஆம் தேதி அன்றும் நடைபெறும் என்று கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாநிலத் தேர்தல் ஆணையர் திரு.ம.ரா.மோகன், இ.ஆ.ப., (ஓய்வு) தெரிவித்துள்ளார்.

இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :-
161 கூட்டுறவுச் சங்கங்களில் 1731 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் 161 தலைவர் மற்றும் துணைத்தலைவர்களுக்கான தேர்தல்

தமிழகத்தில் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை அபிவிருத்தி ஆணையரின் கட்டுப்பாட்டில் புதியதாக துவக்கப்பட்டுள்ள 146 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் செயல்படும் 9 சங்கங்கள், கைத்தறி மற்றும் துணிநுhல் இயக்குநரின் கட்டுப்பாட்டில் செயல்படும் 1 சங்கம், கதர் கிராமத் தொழில்வாரிய முதன்மை செயல் அலுவலர் கட்டுப்பாட்டில் செயல்படும் 1 சங்கம் மற்றும் மீன்வளத்துறை ஆணையரின் கட்டுப்பாட்டில் செயல்படும் 4 சங்கங்கள் ஆக 161 கூட்டுறவுச் சங்கங்களில் 1731 நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கவும், இவர்களில் இருந்து 161 தலைவர் மற்றும் 161 துணைத்தலைவர்களை தேர்ந்தெடுக்கவும், தேர்தல் அட்டவணையை தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் ‘5-ஆம் தேதியும், வாக்குப்பதிவு அக்டோபர்’14-ஆம் தேதியும் நடைபெறும். தலைவர் மற்றும் துணைத்தலைவர்களுக்கான தேர்தல் அக்டோபர் ‘19 ஆம் தேதி அன்று நடைபெறும்.

 இந்த 1731 நிர்வாகக்குழு உறுப்பினர்களில் 311 இடங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவருக்கும் , 477 இடங்கள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

335 கூட்டுறவுச் சங்கங்கங்களில் காலி இடங்கள் 

இது தவிர, 335 கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகக்குழுவில் பல்வேறு காரணங்களினால் ஏற்பட்டுள்ள 424 உறுப்பினர்கள் மற்றும் 79 தலைவர் மற்றும் 53 துணைத்தலைவர் ஆகிய காலி இடங்களுக்கான தேர்தல்களும் இதே தேர்தல் அட்டவணைப்படி நடைபெற உள்ளது.

நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான வேட்புமனுத் தாக்கல்

 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்புமனுக்களை 05.10.2015 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை தாக்கல் செய்யலாம். மறுநாள் 6.10.2015 அன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு மாலை 4.00 மணி முதல் 5.00 மணிக்குள் தகுதியான வேட்பாளர் பட்டியல் தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும்.

வேட்புமனு திரும்பப்பெறுதல்

 தாக்கல் செய்த வேட்புமனுவை திரும்பப் பெற விரும்புவோர் 07.10.2015 காலை 10.00 மணிமுதல் மாலை 4.00 மணி வரை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அன்று மாலை 5.00 மணிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும்.

வாக்குப்பதிவு

நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 14.10.2015 அன்று காலை 8.00 மணிக்குத் துவங்கி மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கை

வாக்குகள் எண்ணும் பணி 15.10.2015 அன்று காலை 10.00 மணிக்குத் துவங்கும். வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன் முடிவுகள் அறிவிக்கப்படும்.

தலைவர், துணைத்தலைவர் தேர்தல்

தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு 15.10.2015 அன்று தேர்தல் அலுவலரால் வழங்கப்படும். தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 19.10.2015 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும்.

 இத்தேர்தல் நடைபெறவுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பெயர் மற்றும் இதர விபரங்கள் குறித்து அந்தந்த மாவட்ட தொடர்புடைய தேர்தல் அலுவலரையும், மாவட்ட தேர்தல் பார்வையாளர்களான கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர்களையும் தொடர்பு கொள்ளலாம். மேலும் ஆணையத்தின் வலைதளம் www.coopelection.tn.gov.in-ல் தேர்தல் நடைபெறவுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பெயர் விவரங்களை அறிந்துக் கொள்ளலாம். மேற்கண்டவாறு கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாநிலத் தேர்தல் ஆணையர் திரு. ம.ரா. மோகன், இ.ஆ.ப. (ஓய்வு) தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.