Sunday, October 25, 2015

Awards to be given for exception service rendered for the welfare of Differently Abled Persons

Application form for the State Awards - Best Employer, Best Social Worker, Best Employee, Best Teacher and Best Institution who render outstanding service for the welfare of the differently abled persons

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் / நிறுவனங்களுக்கு கீழ்க்காணும் தமிழக அரசு விருதுகள், 3.12.2015 மாற்றுத் திறனாளிகள் தினத்தன்று வழங்கப்படவுள்ளது.

வ.எண். விருதுகள் விவரம் விருதுகள் எண்ணிக்கை விருது விவரம்
1.சிறந்த பணியாளர்/ சுயதொழில் புரிபவர் (கை, கால் பாதிக்கப்பட்டோர், பார்வை திறன் பாதிக்கப்பட்டோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் தொழுநோயால் குணமடைந்தோர்) 5 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்.
2. சிறந்த ஆசிரியர் (பார்வைத் திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல், செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பித்தல், மற்றும் மன வளர்ச்சி குன்றியோருக்கு கற்பித்தல்.) 3 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்.
3. சிறந்த சமூகப் பணியாள 1 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்.
4. மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம் 1 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்.
5. மாற்றுத் திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம். 1 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்.
6. ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர். (செவித் திறன் குறைந்தோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்) 2 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்.
7. மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய ஓட்டுநர் மற்றும் நடத்துனர். 2 விருதுகள் 10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்.
மொத்தம் 15 விருதுகள்

மேற்காணும் விருதுகள் பெற மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை, கே.கே. நகர், சென்னை – 78 அல்லது  www.scd.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து அல்லது அந்தந்த மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் அவர்களிடம் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரிடம் பரிந்துரை பெற்று மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்களுக்கு 12-11-2015-க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் அனைத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.


Click Here For Application

முகமது. நசிமுத்தின்,
அரசு முதன்மைச் செயலாளர்.

No comments :

Post a Comment