Showing posts with label Free Enrolment of Traders for Three Months on TNTWB. Show all posts
Showing posts with label Free Enrolment of Traders for Three Months on TNTWB. Show all posts

Thursday, July 15, 2021

Free Enrolment of Traders for Three Months on TNTWB

 தமிழ்நாடு வணிகர்‌ நல வாரியத்தில்‌ மூன்று மாதத்திற்கு இலவச நிரந்தர உறுப்பினருக்கான சேர்க்கை.

Free Online enrolment of Traders for Three Months on Tamil Nadu Traders Welfare Board (TNTWB).

வணிகப்‌ பெருமக்களின்‌ நலனுக்காக இந்தியாவிலேயே முதன்‌ முதலாகத்‌ “தமிழ்நாடு வணிகர்‌ நல வாரியம்‌” என்ற அமைப்பு தமிழ்நாடு வணிகவரித்‌ துறையில்‌ 1989- ஆம்‌ ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.

வணிகர்‌ நல வாரிய உறுப்பினர்களின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு கீழ்க்கண்ட ஏழு வகையான நலத்திட்டங்களைச்‌ செயல்படுத்தி வருகிறது:- 1. குடும்பநல உதவி 2. மருத்துவ உதவி 3. கல்வி உதவி 4. விளையாட்டுப்‌ போட்டி 5. தீவிபத்து 6. நலிவுற்ற வனரிகர்களுக்கு நிதி உதவி 7. சிறப்பான மாணவர்களுக்கு ஊக்கத்தொகை.


மேற்கூறிய நலத்திட்டங்கள்‌ மூலம்‌ 1989- ஆம்‌ ஆண்டு முதல்‌ 31.05.2021 வரை பயனடைந்தோர்‌ 8,873 உறுப்பினர்கள்‌. இதுவரை செலவிடப்பட்‌। மொத்ததொகை ரூ.3,05,73,000/- . மாண்புமிகு வணிகவரி மற்றும்‌ பதிவுத்துறை அமைச்சர்‌ அவர்களால்‌ 16.06.2021- யில்‌ தமிழ்நாடு வணிகவரித்‌ துறையின்‌ கீழ்‌ செயல்படும்‌ தமிழ்நாடு வணிகர்‌ நல வாரியத்தில்‌ உறுப்பினராக சேர வணிகர்களுக்கு இணையவழி வசதி சேவை தொடங்கி  வைக்கப்பட்டது (http://www.tn.gov.in./tntwb/tamil) or https://ctd.tn.gov.in.  வணிகர்கள்‌ இந்த இணையவழி சேவையினை எங்கிருந்தும்‌ பயன்படுத்திக்கொள்ளலாம்‌. மேலும்‌, இணையவழியில்‌ பதிவு செய்ய சிரமம்‌ ஏற்படின்‌, அருகில்‌ உள்ள வணிகவரி வரிவிதிப்பு அலுவலகத்தை அணுகி தங்களின்‌ பதிவை மேற்கொள்ளலாம்‌. இதற்கு வரிவிதிப்பு அலுவலத்தில்‌ இணையம்‌ சார்ந்த சேவை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வணிகர்கள்‌ இந்த இணையம்‌ சார்ந்த சேவையினை பயன்படுத்த சிரமம்‌ இருப்பின்‌ அருகில்‌ உள்ள வரிவிதிப்பு அலுவலகங்களின்‌ உறுப்பினர்‌ சேர்க்கைக்கான படிவம்‌ பெற்று பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன்‌ நேரிடையாகவும்‌ சமர்ப்பிக்கலாம்‌.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ வணிகர்‌ நல வாரியத்தை சீரமைத்து உறுப்பினர்‌ சேர்க்கையை செம்மைப்படுத்தி திறம்பட செயல்படும்‌ வகையில்‌ சிறு மற்றும்‌ குறு வணிகர்களின்‌  வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இந்த வாரியத்தின்‌ மூலம்‌ நலத்திட்டங்களை செயல்படுத்த ஏதுவாக சரக்கு மற்றும்‌ சேவை வரி (GST) சட்டத்தில்‌ பதிவு பெற்று “விற்று முதல்‌ அளவு” (Turn Over)‌ ரூ.40,00,000/- (ரூபாய்‌ நாற்பது இலட்சம்‌ மட்டும்‌) உட்பட்ட சிறு வணிகர்கள்‌ மற்றும்‌ சரக்கு மற்றும்‌ சேவை வரி (GST) சட்டத்தின்‌ கீழ்‌ பதிவு பெறாத குறு வணிகர்கள்‌ இந்த வாரியத்தில்‌ உறுப்பினர்களாக சேர, சேர்க்கைக்‌ கட்டணத்‌ தொகையான ரூ.500/- ஐ வசூலிப்பதிலிருந்து மூன்று மாதங்களுக்கு 15.07.2021 முதல்‌ விலக்களித்து ஆணையிட்டுள்ளார்‌.

எனவே வணிகர்கள்‌, தமிழ்நாடு வணிகர்‌ நல வாரியத்தில்‌ உறுப்பினராக பதிவு செய்து பயன்பெற கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.