Showing posts with label Sale of Vegetables and Fruits During the Complete Lockdown. Show all posts
Showing posts with label Sale of Vegetables and Fruits During the Complete Lockdown. Show all posts

Monday, May 24, 2021

Sale of Vegetables and Fruits During the Complete Lockdown

 Honble Minister for Agriculture and Farmers Welfare chaired a meeting on the sale of vegetables and fruits during the complete lockdown due to COVID-19

செய்தி வெளியீடு எண்‌: 137 

நாள்‌:23.05.2021

செய்தி வெளியீடு

கோவிட்‌ 19 முழு ஊரடங்கு 24.05.2021 முதல்‌ 31.05.2021 வரை காய்கறி மற்றும்‌ பழங்கள்‌ பொதுமக்களுக்கு விற்பனை செய்தல்‌ மாண்புமிகு வேளாண்மை - உழவர்‌ நலத்துறை அமைச்சர்‌ திரு. எம்‌.ஆர்‌.கே. பன்னீர்செல்வம்‌ அவர்கள்‌ 23.05.2021 அன்று கோவிட்‌ 19 முழு ஊரடங்கினை தொடர்ந்து பொது மக்களுக்கு காய்கறி மற்றும்‌ பழங்கள்‌ விற்பனை செய்வது தொடர்பாக வேளாண்மை உற்பத்தி ஆணையர்‌ மற்றும்‌ அரசு முதன்மை செயலாளர்‌ மருத்துவர்‌ கே. கோபால்‌, இ.ஆ.ப., வேளாண்மை - உழவர்‌ நலத்துறை இயக்குநர்‌, திரு. வ. தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப. வேளாண்மை விற்பனை மற்றும்‌ வேளாண்‌ வணிகத்‌ துறை இயக்குநர்‌ திரு. க.வீ. முரளிதரன்‌, இ.ஆ.ப, மற்றும்‌ உயர்‌ அலுவலர்களுடன்‌ ஆய்வு கூட்டம்‌ மேற்கொண்டு கீழ்க்கண்ட நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டுள்ளது.



  • தமிழ்நாட்டிலுள்ள மக்கள்‌ தொகை சுமார்‌ 7 கோடி
  • காய்கறி மற்றும்‌ பழங்கள்‌ தேவை தினந்தோறும்‌ சுமார்‌ 18,000 மெட்ரிக்‌ டன்‌ என எதிர்பாக்கப்படுகிறது.
  • சென்னையை பொறுத்தவரை தினம்‌ தோறும்‌ 1500 மெட்ரிக்‌ டன்‌ அளவிற்கு காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்கள்‌ தேவைப்படும்‌.
  • சென்னை மாநகரத்தில்‌ மட்டும்‌ அனைத்து மண்டலங்களிலும்‌ 1610 வாகனங்கள்‌ மூலம்‌ தினந்தோறும்‌ 1160 மெட்ரிக்‌ டன்‌ அளவிற்கு காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்கள்‌ விநியோகம்‌ செய்ய ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளன.தமிழகத்தின்‌ ஏனைய பகுதிகளில்‌ 2770 வாகனங்கள்‌ மூலம்‌ 2228 மெட்ரிக்டன்‌ அளவிற்கு காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்கள்‌ விற்பனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இப்பணிகளுக்கு தேவையான காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்கள்‌ அருகில்‌ உள்ள விவசாயிகளிடம்‌ இருந்து நேரடியாக கொள்முதல்‌ செய்து விநியோகம்‌ செய்யப்படும்‌.
  • தமிழகத்தில்‌ காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்கள்‌ விநியோகம்‌ தொடர்பான தகவல்‌ தெரிந்து கொள்ள 044 2225 3884 என்ற தொலைபேசி எண்ணை பொதுமக்கள்‌ பயன்படுத்திக்‌ கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இப்பணிகளை கண்காணித்திட தலைமையகத்தில்‌ தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண்மை விற்பனைத்‌ துறை சார்ந்த அலுவலர்கள்‌ அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்கள்‌ விநியோகத்‌ தொடரை மேலும்‌ விரிவுபடுத்திட
      • நின்சாகார்ட்‌,
      • வேகூல்‌,
      • பழமுதிர்‌ நிலையம்‌,
      • தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர்‌ இணையம்‌,
      • அஹிம்சா விவசாயிகள்‌ உற்பத்தியாளர்‌ நிறுவனம்‌ .
போன்றவற்றையும்‌ ஈடுபடுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.
  • தமிழகம்‌ முழுவதும்‌ 194 குளிர்பதன இடங்கள்‌ 18,527 மெட்ரிக்‌ டன்‌ கொள்ளளவில்‌ உள்ளன. அதில்‌ தற்போழுது சுமார்‌ 3000 மெட்ரிக்‌ டன்‌ மட்டுமே விளை பொருட்கள்‌ சேமிப்பு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார்‌ 15527 மெட்ரிக்டன்‌ கொள்ளளவை அருகில்‌ உள்ள விவசாயிகள்‌ தங்களது விளைபொருட்களை சேமித்து வைக்கலாம்‌.
  • உள்ளாட்சித்‌ துறை மற்றும்‌ கூட்டுறவுத்‌ துறையுடன்‌ இணைந்து உள்ளாட்சி அமைப்புகள்‌ மூலமாகவும்‌ காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்கள்‌ விநியோகம்‌ செய்ய ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளன.
  • மக்களின்‌ அன்றாட காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்கள்‌ தேவையை பூர்த்தி செய்திட மாண்புமிகு தமிழக முதலமைச்சர்‌ அவர்கள்‌ வழங்கியுள்ள அறிவுரைப்படி தமிழகம்‌ முழுவதும்‌ விரிவான பல்வேறு ஏற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளன.
  • தினமும்‌ காலை 6.00 மணி முதல்‌ மதியம்‌ 12.00 மணி வரை பொதுமக்களுக்கு காய்கறி மற்றும்‌ பழங்கள்‌ விற்பனை செய்யப்படும்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, 

சென்னை-9