Thursday, August 20, 2015

Subvention Scheme for Short Term Crop Loans

செய்தி வெளியீடு எண்: 414
நாள் : 19.08.2015


விவசாயிகளுக்கான குறுகிய கால பயிர்க்கடன் வட்டி மானிய திட்டத்தை நடப்பு நிதியாண்டில் 30.6.2015 வரை மட்டும் மத்திய அரசு நீட்டித்து மாற்று திட்டத்தை ஆலோசித்து வந்த நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் இது தொடர்பாக கடிதம் ஒன்று 29.4.2015 அன்று அனுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து 20.6.2015 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள், மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், விவசாயிகளுக்கான குறுகிய கால பயிர்க் கடன் வட்டி மானியத் திட்டத்தில், தற்போதுள்ள நடைமுறைகளின்படியே தொடர வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தி எழுதியுள்ளார்கள். மத்திய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அறியப்பட்ட இரண்டு மாற்றங்களும் பாதகமானவை என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தார்கள். முதலாவதாக, வங்கிகள், முன்னுரிமை பிரிவுகளுக்கு அடிப்படையான வட்டி விகிதத்தில் கடன் வழங்க அனுமதித்தல், இரண்டாவதாக, பயனாளிகளுக்கு நேரடியாக மானியம் வழங்குதல், அதாவது விவசாயிகள் தாங்கள் பெற்ற கடனை முழுமையாக திரும்பச் செலுத்திய பின்னர், நேரடியாக மானியம் வழங்கும் முறை, தற்போதுள்ள நடைமுறையான வங்கிகளின் கடன் வழங்கும் தகுதிக்கேற்ப வட்டி மானியத்தினை வங்கிகளுக்கு வழங்கும் முறைக்கு மாறுபட்டதாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் மேலும் தமது கடிதத்தில், எதிர்பாராத நிகழ்வுகளுக்கு உட்படும் வேளாண்மைப் பணிகளை மேற்கொள்ளும்போது, தற்போது வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்துவதோ, அல்லது விவசாயிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளை குறைப்பதோ தேவையற்றதாகும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இச்சூழ்நிலைகளில் விவசாயிகள் அதிக வட்டியினை முதலில் செலுத்தி, பின்னர் அத்தொகையை, நேரடி மானியம் மூலம் பெறுவது என்பது விவசாயிகளை கடுமையாகப் பாதிக்கும் என்றும், தற்போது நடைமுறையில் உள்ளபடி, விவசாயிகளுக்கு வங்கி கணக்கு மூலம் கடன் வழங்கப்படும்போதே, விவசாயிகள் வட்டி சலுகைகளைப் பெற்று வருகின்றனர். நேரடி மானியத் திட்டத்திற்கு மாறும்போது, கடனைத் திரும்பச் செலுத்திய பின்னர், மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகளுக்கு எவ்வித பலனும் இல்லாததுடன், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் கிடைப்பதிலும், இலக்கினை அடைவதிலும், பொறுப்புடைமையிலும் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது என்றும் அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் தமது கடிதத்தில், தமிழ்நாடு அரசு, கூட்டுறவுகள் மூலம் வழங்கப்படும் பயிர் கடன்களுக்கு, மாநில அரசின் நிதியிலிருந்து 4 சதவிகிதத் தொகையினை, ஊக்க வட்டி மானியமாக மத்திய அரசு வழங்கும் வட்டி மானியத்துடன் கூடுதலாக வழங்கி வருவதனையும் குறிப்பிட்டுள்ளார்கள். இதனால், தமிழ்நாட்டில்

விவசாயப் பெருமக்கள், உரிய காலத்தில் கடனை செலுத்தும்போது, வட்டியின்றி பயிர்க்கடன் பெற்று பெரும்பயன் அடைகின்றனர். நம்நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கு உந்துதல் கொடுக்க வேண்டும் எனில், விவசாயிகளுக்கு தேவையான அளவு பயிர் கடன் கிடைக்கச் செய்வது அவசியம். எனவே, அடிப்படை நிலவரத்தை கருத்திற்கொள்ளாமல், தற்போதுள்ள நடைமுறையினை மாற்றம் செய்வது, கடும் எதிர் விளைவுகளை உருவாக்கக் கூடும்.

எனவே, நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் விவசாயிகளுக்கான இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு, மாண்புமிகு பாரத பிரதமர் அவர்கள் நேரடியாக தலையிட்டு, இத்திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்கள் குறித்து, தொடர்புடைய அனைவரிடமும் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்தாலோசனை மேற்கொண்டு, விவசாயிகளுக்கு அதிக பயன் தரக்கூடிய வகையில் திட்டம் அமையவேண்டும் எனவும் தற்போது, நடைமுறையில் உள்ளவாறே குறுகிய கால பயிர் கடன் வட்டி மானியத் திட்டம் தொடர வேண்டும் எனவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் கடிதத்திற்கு மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு 3.8.2015 தேதியிட்ட பதில் கடிதத்தில், மத்திய அரசு தற்போதுள்ள வட்டி மானியத் திட்டத்தின்படி மார்ச் 2016 வரை குறுகிய கால பயிர்க் கடன்களுக்கு வட்டி மானியம் தொடர்ந்து வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக, மத்திய அரசின் வேளாண்மைத் துறையால் ஒரு குழு அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாகவும், இக்குழு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்களை மேம்படுத்தவும், வட்டி மானியத் திட்டத்தின் நிதி ஆதாரங்களை அதிக அளவில் பயன்படுத்தவும் பரிந்துரைக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இப்பொருள் தொடர்பாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசனை மேற்கொள்வதற்கான விவாதக் குறிப்புகளை நிதி ஆயோக் அமைப்பு தயாரித்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் மேற்கொண்ட முயற்சியால் இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகள், தடையில்லாத குறுகிய கால விவசாயக் கடன் பெற வழிவகை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மூலமாக 2014-2015ஆம் நிதி ஆண்டில் 10,36,859 விவசாயிகளுக்கு, ரூ.5,000 கோடி என நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதலாக, ரூ.5,279.91 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் (2015-2016) 10 லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.5,500 கோடி பயிர்க்கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

*****

வெளியீடு:
இயக்குநர் - செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை – 9
நாள்: 19.8.2015

Condolence Message of Chief Minister on the demise of Subedar G.Annamalai

Condolence and relief message of the Honble Chief Minister on the demise of Subedar G.Annamalai.

செ. கு. எண்: 074
          
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை - 20.8.2015

18.8.2015 அன்று அருணாச்சலப் பிரதேச மாநிலம், டாம்டெங் என்ற இடத்திலிருந்து யங்ட்சே என்ற இடம் வரை ராணுவப்படை “Operation Falcon”-ஐ சேர்ந்த “201 - பொறியாளர்கள் படைக்குழு” வான் வழியே கம்பிவடம் அமைக்கும் பணியினை மேற்கொண்டிருந்த போது அப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதில், அக்குழுவினை தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்த வேலூர் மாவட்டம், பெரியபாளம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் படைக்குழு சுபேதார் திரு. G.அண்ணாமலை என்பவர் தனது குழுவினர்கள் அனைவரையும் பத்திரமாக காப்பாற்றி பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிய பிறகு, எதிர்பாராமல் வழுக்கி பாறை மீது விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை
அறிந்து நான் மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.

 பணியின் போது வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் சுபேதார் திரு. அண்ணாமலை அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பணியின் போது வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் சுபேதார் திரு. அண்ணாமலை அவர்களின் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் வழங்க நான்  உத்தரவிட்டுள்ளேன்.

 ஜெ ஜெயலலிதா
 தமிழ்நாடு முதலமைச்சர்     

Monday, August 17, 2015

Admission Open For Academic Session 2015-16 PG in Yoga and Naturopathy

Commissionerate of Indian Medicine and Homoeopathy, Chennai-106.


Admission process for the Academic session 2015-16 for 3 Years Post Graduate course in Yoga and Naturopathy [ M.D.(Yoga and Naturopathy) ] at Government Yoga and Naturopathy Medical College, Chennai-106 has begun. Candidates who possess B.N.Y.S or N.D (OSM) degree/diploma and have registered their names with the Tamil Nadu Board of Indian Medicine can download the Prospectus, Application form and the required Annexure from the Health and Family Welfare Department website www.tnhealth.org from 17.08.2015 onwards. The last date for downloading of Application from the above website and also for submission of Filled in Application is 11.09.2015. The Filled in Application along with enclosures and Crossed DD for Rupees Two Thousand only should reach

“The Secretary, Selection Committee, Directorate of Indian Medicine and Homoeopathy, Arignar Anna Government Hospital of Indian Medicine Campus, Arumbakkam, Chennai 600106, Tamil Nadu”

on or before the last date. Crossed Demand Draft for Rupees Two Thousand only should be drawn on or after 17.08.2015 from any nationalized bank in favour of “Director of Indian Medicine and Homoeopathy, Chennai-106 “ and Payable at Chennai. Candidates, domiciled in TamilNadu, belonging to S.C / S.C (A) / S.T Communities are exempted from the payment of application fees. Applications are NOT issued at the Directorate of Indian Medicine and Homoeopathy or at the Selection Committee office.

The Entrance Examination for the above course will be held on 26.09.2015 at 9.30am at

“Government Siddha Medical College, Arignar Anna Govt Hospital of Indian Medicine Campus, Arumbakkam, Chennai-106.”

Principal Secretary/Commissioner of Indian
 Medicine and Homoeopathy

Friday, August 14, 2015

Application for the post of Livestock Inspector- Grade II

Independence Day Greeting message of the Honble Chief Minister -2015

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் சுதந்திரத் திருநாள் வாழ்த்துச் செய்தி

ஆங்கிலேயர்களின் அடிமை விலங்கினை உடைத்தெறிந்து, நம் இந்தியத் திருநாடு சுதந்திரம் பெற்ற இப்பொன்னாளில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து நம் தாய்த் திருநாட்டை மீட்டு, நாட்டு மக்களும் அவர்தம் வருங்கால சந்ததியினரும் சுதந்திர காற்றை சுவாசித்திட, தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்து, நாட்டு விடுதலைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து உயிர் தியாகம் செய்த தன்னலமற்ற சுதந்திர போராட்ட தியாகச் செம்மல்களின் நாட்டுப் பற்றையும் தியாக உணர்வையும் போற்றி நினைவுகூரும் நன்னாள் இந்த சுதந்திரத் திருநாளாகும்.


இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட தியாகிகளைப் போற்றிடும் வகையில் எனது தலைமையிலான அரசு, தியாகிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர ஓய்வூதியத்தை 9,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும்; அவர்களது வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தை 4,500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும்; வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, வ.உ. சிதம்பரனார் ஆகியோரது வழித்தோன்றல்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர சிறப்பு ஓய்வூதியத்தை 2,000 ரூபாயிலிருந்து 4,500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கி வருகிறது.

மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் அளப்பறிய தியாகங்களை வருங்கால சந்ததியினர் அறிந்து போற்றிடும் வகையில் பல்வேறு தியாகிகளின் மணிமண்டபங்களை எனது தலைமையிலான அரசு எழுப்பி சிறப்பித்து வருவதுடன், தியாகிகளின் நினைவிடங்கள், நினைவு இல்லங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் மணிமண்டபங்களை புதுப்பித்து, புனரமைத்து, பராமரித்து வருகிறது. அந்த வகையில், 2014-ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், சூரக்குளத்தில் அமைக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு மண்டபம் மற்றும் வீரத்தாய் குயிலி நினைவுச் சின்னத்தையும், 2015-ஆம் ஆண்டு விருதுநகரில் அமைக்கப்பட்ட தியாகி சங்கரலிங்கனார் மணிமண்டபம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், கயத்தாற்றில் அமைக்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தையும் பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைத்தேன்.

“இமயம் தொட்டுக் குமரி மட்டும் இங்கிருக்கும் யாவரும்
இந்தியாவின் மக்களென்ற சொந்தம் காணச் செய்குவோம்”

                       -- என்ற நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் பாடல் வரிகளுக்கேற்ப, நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒற்றுமை உணர்வுடன், நம் முன்னோர்கள் போராடிப் பெற்ற சுதந்திரத்தை பேணிக் காத்து, இந்திய திருநாட்டை வல்லரசாக்கவும், தமிழ்நாட்டை வளமிக்க முன்னோடி மாநிலமாக உருவாக்கிடவும், அனைத்து தரப்பு மக்களும் சாதி,மத, மொழி, இன வேறுபாடுகளை களைந்து, ஒற்றுமையுடன் வாழ்ந்திட உறுதியேற்போம் எனக் கூறி, அனைவருக்கும் எனது சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

ஜெ ஜெயலலிதா
தமிழ்நாடு முதலமைச்சர்