Friday, July 30, 2021

D.O. to PM to remove the capping of Central share of premium subsidy under PMFBY

 Text of the D.O. Letter of the Honble Chief Minister addressed to the Honble Prime Minister of India, requesting to take necessary action urgently to remove the capping of Central share of premium subsidy under PMFBY - Tamil Version

“பயிர்க்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தின்கீழ்‌ காப்பீட்டுக்‌ கட்டணத்தில்‌ ஒன்றிய அரசின்‌ பங்களிப்பினை முன்பிருந்தபடி திரும்ப மாற்றியமைக்க வேண்டும்‌” என வலியுறுத்தி மாண்புமி ந்தியப்‌ பிரதமர்‌ அவர்களுக்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ கடிதம்‌.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌, மாண்புமிகு இந்தியப்‌ பிரதமர்‌ மற்றும்‌ ஒன்றிய வேளாண்மைத்துறை அமைச்சர்‌ அவர்களுக்கு, 28- 7- 2021 அன்று எழுதியுள்ள கடிதத்தில்‌, பிரதம மந்திரியின்‌ பயிர்க்‌ காப்பீட்டுத்‌ திட்டத்தின்கீழ்‌ காப்பீட்டுக்‌ கட்டணத்தில்‌ ஒன்றிய அரசின்‌ பங்களிப்பினைக்‌ குறைக்கும்‌ வகையில்‌, உயர்ந்தபட்ச விகிதத்தை நிர்ணயிக்கும்‌ முறையை நீக்கி, மாநிலத்தில்‌ உள்ள விவசாயிகளின்‌ நலனைக்‌ கருத்தில்கொண்டு, முன்பு இருந்தபடி 49:49:2 என்ற விகிதத்தில்‌ காப்பீட்டுக்‌ கட்டணப்‌ பங்கினைத்‌ திரும்ப மாற்றியமைக்க வேண்டும்‌ என்று வலியுறுத்தியுள்ளார்‌.

வேளாண்‌ துறையில்‌ விவசாயிகளின்‌ பொருளாதாரத்தினை மேம்படுத்தும்‌ நோக்கில்‌, வேளாண்மை மற்றும்‌ உழவர்‌ நலத்துறை எனப்‌ பெயர்‌ மாற்றம்‌ செய்யப்பட்டுப்‌ பல்வேறு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தனது கடிதத்தில்‌ குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌, தமிழ்நாட்டில்‌ சாகுபடிப்‌ பரப்பளவினை அதிகரித்தல்‌, ஒரு முறைக்கும்‌ மேல்‌ சாகுபடி செய்யும்‌ பரப்பினை இரட்டிப்பாக்குதல்‌ மற்றும்‌ உணவு தானியங்களின்‌ உற்பத்தித்‌ திறனை அதிகரித்தல்‌ ஆகிய மூன்று தொலைநோக்குப்‌ பார்வையுடன்‌ வேளாண்மைக்கெனத்‌ தனி வரவு- செலவுத்‌ திட்ட அறிக்கையை நடப்பாண்டு முதல்‌ தாக்கல்‌ செய்யத்‌ திட்டமிட்டுள்ளதாகவும்‌ குறிப்பிட்டுள்ளார்‌.

Read More..

No comments :

Post a Comment