Monday, July 12, 2021

Resolution Passed in the All Party Meeting Held in connection with the Mekedatu Issue

மேகதாது பிரச்சனை குறித்து நடைபெற்ற அனைத்து சட்டமன்றக்‌ கட்சியினருடனான ஆலோசனைக்‌ கூட்டத்தில்‌ இன்‌று (12.07.2021) ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட மூன்று முக்கிய தீர்மானங்கள்‌.

தீர்மானம்‌ 1

     “உச்சநீதிமன்றத்‌ தீர்ப்பின்படி, காவிரியின்‌ கீழ்ப்படுகை மாநிலங்களின்‌, முன்‌ அனுமதியைப்‌ பெறாமல்‌ மேகதாதுவில்‌ எந்தவொரு கட்டுமானப்‌ பணியையும்‌ மேற்கொள்ளக்‌ கூடாது. அதை மீறி, தற்பொழுது மேகதாதுவில்‌ அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு முழு முனைப்புடன்‌ செய்து வருவது மிகவும்‌ கண்டனத்திற்குரியது. இத்திட்டத்தினால்‌ தமிழ்நாடு விவசாயிகளுக்குத்‌ தேவையான நீர்‌ கிடைப்பது பாதிப்படையும்‌. உச்ச நீதிமன்றத்‌ தீர்ப்பிற்கு எதிரான இத்தகைய முயற்சி, இந்திய அரசியலமைப்புச்‌ சட்டத்தின்‌ மாட்சிமைக்கு விடப்படும்‌ சவாலாகும்‌. எனவே, கர்நாடக அரசின்‌ இத்திட்டத்திற்கு, இதில்‌ தொடர்புடைய ஒன்றிய அரசின்‌ அமைச்சகங்கள்‌ எவ்விதமான அனுமதிகளையும்‌ வழங்கக்‌ கூடாது என ஒன்றிய அரசைக்‌ கேட்டுக்கொள்வது.


தீர்மானம்‌ 2

      இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளைத்‌ தடுப்பதில்‌ தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும்‌ அனைத்து நடவடிக்கைகளுக்கும்‌ மாநிலத்தில்‌ உள்ள அனைத்துக்‌ கட்சிகளும்‌ தங்கசுடைய முழு ஆதரவையும்‌, முழு ஒத்துழைப்பையும்‌ வழங்கும்‌.

தீர்மானம்‌ 3

        தமிழ்நாட்டு மக்களின்‌ ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும்‌ வகையில்‌, இக்கூட்டத்தின்‌ தீர்மானங்களை ஒன்றிய அரசிடம்‌ அனைத்துக்‌ கட்சியினரும்‌ நேரில்‌ சென்று முதற்கட்டமாக வழங்குவது. அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில்‌ நிலுவையிலிருக்கும்‌ வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள்‌ மற்றும்‌ தேவைப்படும்‌ அனைத்து நடவடிக்கைகளையும்‌ மேற்கொள்வது” எனத்‌ தீர்மானிக்கப்பட்டது.

No comments :

Post a Comment