Thursday, May 20, 2021

Chief Minister Conducted Surprise Inspection at a PHC in Magudanchavadi

 Honble Chief Minister conducted surprise inspection at a PHC in Magudanchavadi, Salem District and seen the vaccination work in progress.

செய்தி வெளியீடு எண்‌:109 

நாள்‌:20.05.2021

செய்தி வெளியீடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (20.5.2021) சேலம்‌ உருக்காலை வளாகத்தில்‌ கொரோனா நோயாளிகளின்‌ சிகிச்சைக்காக ஆக்ஸிஜன்‌ வசதியுடன்‌ கூடிய 500 படுக்கை வசதிகள்‌ கொண்ட கோவிட்‌ சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்து, திருப்பூர்‌ செல்லும்‌ வழியில்‌, சேலம்‌ மாவட்டம்‌, மகுடஞ்சாவடியில்‌ உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில்‌ சென்று திடீர்‌ ஆய்வு மேற்கொண்டு அங்கு வழங்கப்பட்டு வரும்‌ 24 மணிநேர அவசர மருத்துவ சிகிச்சைகள்‌ குறித்தும்‌, மருத்துவ வசதிகள்‌ குறித்தும்‌ கொரோனா தடுப்பூசி அளிப்பது குறித்தும்‌, பொதுமக்களிடம்‌ கேட்டறிந்தார்‌.



மேலும்‌, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌, விபத்தில்‌ காயமடைந்து சிகிச்சை பெற்று வரும்‌ நபருக்கு அளிக்கப்படும்‌ சிகிச்சையை பார்வையிட்டார்‌. அங்கு பணியாற்றி வரும்‌ மருத்துவர்கள்‌ மற்றும்‌ செவிலியர்களிடம்‌ ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ வசதிகள்‌ மற்றும்‌ தேவைகள்‌ குறித்து கேட்டறிந்தார்‌.

இந்த நிகழ்வின்போது, மாண்புமிகு மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை அமைச்சர்‌ திரு. மா. சுப்பிரமணியன்‌, மாண்புமிகு மின்சாரம்‌, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌ துறை அமைச்சர்‌ திரு. வி. செந்தில்‌ பாலாஜி, நாடாளுமன்ற மற்றும்‌ சட்டமன்ற உறுப்பினர்கள்‌, சேலம்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ திரு. எஸ்‌. கார்மேகம்‌, இ.ஆ.ப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

வெளியீடு: 

 இயக்குநர்‌, 

செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, 

சென்னை-9

No comments :

Post a Comment