Monday, May 24, 2021

Letter to Minister of Defence to Speed Up the Search of Missing Fishermen

 Letter of the Honble Chief Minister to the Honble Union Minister for Defence to speed up the search of missing fishermen after a fishing boat capsized near Lakshadweep due to strong windstorm in view of cyclone Tauktae.

செ. கு. எண்‌:08 

நாள்‌: 23.05.2021

கன்னியாகுமரி மாவட்டத்தைச்‌ சேர்ந்த 12 மீனவர்கள்‌ மற்றும்‌ வங்க தேசத்தைச்‌ சேர்ந்த 4 மீனவர்களையும்‌ விரைவில்‌ தேடிக்‌ கண்டுபிடிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ ஒன்றிய பாதுகாப்புத்‌ துறை அமைச்சர்‌ திரு.ராஜ்நாத்‌ சிங்‌ அவர்களுக்கு கடிதம்‌

கேரள மாநிலத்தைச்‌ சேர்ந்த திரு.சபிஷ்‌, என்பவருக்கு சொந்தமான அமீர்‌ ஷா என பெயர்‌ கொண்ட மீன்பிடி விசைப்படகு பதிவு எண்‌ IND-KL-07-MM-4989 ல்‌ 05.05.2021 அன்று கேரள மாநிலம்‌ கோழிக்கோடு அருகில்‌ உள்ள பைபோர்‌ (8ஸூ0ா9 மீன்பிடி துறைமுகத்திலிருந்து 16 மீனவர்களுடன்‌ மங்களூர்‌ பகுதிக்கு மீன்பிடிக்கச்‌ சென்றுள்ளனர்‌. அந்த 16 மீனவர்களில்‌ 12 மீனவர்கள்‌ கன்னியாகுமரி மாவட்டத்தையும்‌ 4 மீனவர்கள்‌ மேற்கு வங்காளத்தையும்‌ சேர்ந்தவர்கள்‌ ஆவார்கள்‌. “டவ்‌ தே” புயல்‌ கடந்த பின்பு 16 மீனவர்களை தொடர்பு கொள்ள இயலாமலும்‌ அவர்கள்‌ காணாமல்‌ போய்விட்டதாகவும்‌ தகவல்‌ பெறப்பட்டது. இது தொடர்பாக, இந்திய கடலோர காவற்படையினருக்கு உடனடியாக தகவல்‌ தெரிவிக்கப்பட்டு கடலோர காவற்படையினரால்‌ தேடுதல்‌ பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


காணாமல்‌ போன மீனவர்கள்‌ குறித்த தகவல்‌ இதுவரை ஏதும்‌ பெறப்படாதது அவர்களது குடும்பத்தினரிடையேயும்‌, மீனவ சமுதாய மக்களிடையேயும்‌ பெரும்‌ மனத்துயரத்தையும்‌, பதட்டத்தையும்‌ ஏற்படுத்தியுள்ளதால்‌, அவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை மேற்கொள்ளக்‌ கோரி ஒன்றிய பாதுகாப்புத்‌ துறை அமைச்சர்‌ திரு. ராஜ்நாத்‌ சிங்‌ அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ கடிதம்‌ எழுதியுள்ளார்‌.

வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9

No comments :

Post a Comment